பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



39

இந்த எட்டாவது வாரத்தில் தான் நன்றாகத் தெரியும். ஆண் பெண் உறுப்புக்களை அப்போது அறிந்து கொள்ள முடியாது.

இரா:-அதிசயமாக இருக்கிறதே. இப்படித்தான் ஒவ்வொரு உறுப்பாக வளருமோ? பிறகு ?

முரு :-தம்பி ! இதில் அதிசயப்பட என்ன இருக்கிறது? உலகில் எத்தனயோ நிகழ்ச்சிகள் நம்மை அறியாமலேயே நடக்கின்றன. எத்தனையோ நம்மை அறியாமல் வளர்கின்றன. கருவோ நம் பெண்கள் வயிற்றிலே அவர்களே புரிந்து கொள்ள முடியாதபடி வளர்ந்து வருகின்றது. சரி ; வேறு எங்கோ போகிறேன். இதோ அடுத்துக் கருவின் நிலையைச் சொல்லுகிறேன். இன்னும் ஒரு மாதம் தள்ளிப் பார்ப்போமா ? ஆமாம்.

பன்னிரண்டு வாரங்கள் கழித்து, கருவின் வயிற்றுக்குள் குடல்கள் உருவாகும். அதே வேளையில், மூளையின்