பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



42

பன்னிரண்டாம் வாரத்துக்கும் இடையில் தோன்றிவிடும். இவற்றுள் கெட்ட ரத்தக் குழாய்களும் நல்ல ரத்தக் குழாய்களும் உள்ளன என்பது உனக்குத் தெரிந்தது தானே. இருதயம் இயங்க இவை இரண்டும் தேவை அல்லவா!

பன்னிரண்டாவது வாரத்தில் வயிற்றில் குடல்கள் உருவாகின்றன என்று சொன்னேன் அல்லவா! நான்காவது வாரத்திலேயே செரிக்கும் உறுப்புக்கள் காணப்பட்டாலும் இந்த வாரத்தில்தான் குடலோடு ஒட்டிப் பூரண வளர்ச்சி பெறும், இதற்கு இடையில் நுரை ஈரல், சுவாசப் பை முதலிய உறுப்புகள் தலை காட்டி வளர்ந்து கொண்டே வரும். இந்தப் பன்னிரண்டாவது வார இறுதியில் ஆண் பெண் வேறுபாட்டு உறுப்புக்களும் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறு இந்த வாரக் கடைசியில், அதாவது கரு உண் டான மூன்றாவது மாத முடிவில் ஏறக்