பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



43

குறைய குழந்தையின் உள் உறுப்புக்களும் வெளி உறுப்புக்களும் உருவாகி விடும் எனலாம்.

பதினாறாவது வாரத்தில், முன் பன்னிரண்டாவது வாரத்தில் தோன்ற ஆரம்பித்த ஆண் பெண் உறுப்புக்கள் நன்றாகத் தெரிந்து விடும். நான்கு மாதக் குழந்தையை ஆணா பெண்ணா என்று நன்றாகச் சொல்லி விடலாம். இம் மாதக் கடைசியில் அக் கருவின் மேல் தோலில் மயிர்கள் முளைக்கத் தொடங்கும்.

இருபதாவது வாரத்தில் உடல் சற்று மொத்தத்தில் வளர்ச்சி அடைந்திருக்கும். தலை பருத்து இருக்கும். தோலை ஒட்டிக் கொழுப்புப் பொருள்கள் உருவாகும். அதனால் குழந்தை பருமை அடைய ஏதுவாகும் அல்லவா! ஆனால் அந்த வெண்ணெய் போன்ற கொழுப்புப் பொருள் முதலில் தோலின் வெளிப்புறத்தில்தான் தோன்றும்.