பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



44

இருபத்து நான்காவது வாரத்துக்குள் அந்தக் கொழுப்புப் பொருள் மெள்ள மெள்ளத் தோலுக்குள் புகுந்து உடல் வளரத் துணை செய்யும். தலையிலும் மயிர் முளைக்கத் தொடங்கும். உடல் மொத்தத்தில் வளர்ச்சி அடையும்.

இருபத்து எட்டாவது வாரத்தில் அதாவது ஏழாவது மாதத்தில் கண் இரப்பைகள் திறந்து கொள்ளும். கண் ணுக்கு வெளியே முடிக் கிடக்கும் 'ஜவ்வு' மெள்ளப் பார்வைக்கு இடம் விட்டு விலகிச் செல்லும். உடல் முழு வதும் மயிர்கள் வளர்ந்து மூடிக் கொள்ளும். குடல்களைச் சுற்றி 'ஜவ்வு' போன்ற பொருள் தோன்றும். சாதாரணமாக இந்த ஏாழாவது மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் வாழமாட்டா. ஆனல் இந்த மாதத்தை ஒட்டிப் பிறக்கும் குழந்தைகளுள் ஒன்றிரண்டு பிழைக்கலாம். பெரும்பாலும் இறந்தே விடும். நல்ல