பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45

போஷாக்கு உள்ள குழந்தைகள் ஒரு வேளை பிழைக்கலாம். அவற்றை நன்றாகப் பாதுகாக்க வேண்டும்.


ஏழு மாதக் குழந்தையும் கருப்பையின் சூழலும்.

முப்பத்து இரண்டாவது வாரக் கடைசியில் குழந்தை நன்றாக வளர்ந்திருக்கும். எடையும் சுமார் 4 பவுண்டு இருக்கும். விரல்களில் நகங்கள் முன் மாதத்திலேயே தெரியுமாயினும் இம் மாதத்தில்தான் நன்றாக வளரும். என்றாலும் அது பூரணமாக வளர்ந்து விரலின் நுனிக்கு வந்து விடாது. இந்த மாதத்தில்