பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

பிறக்கும் குழந்தைகளை நல்லபடி பாதுகாத்தால் பெரும்பாலும் பிழைக்க வைத்து விடலாம்.

முப்பத்து ஆறாவது வாரத்தில் அதாவது ஒன்பதாவது மாதத்தில் முழு வளர்ச்சி பெற்றிருக்காது. என்றாலும் பிறக் கத் தேவையான எல்லா அம்சங்களையும் பெற்றிருக்கும். எடை சுமார் 7 பவுண்டு இருக்கும். கொழுப்புப் பொருள் உடலுள் அதிகமாக இருக்கும். மேல் தோல் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும். உடம்பும் அதன் தேவையான வளைவுகளைப் பெற்று விடும். இக் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் பிழைத்து விடும்.

நாற்பதாவது வாரம் அல்லது பத்தாவது மாதத்தில் முழு வளர்ச்சி பெற்ற குழந்தை பூமியில் வந்து பிறக்கும் என் பதை நீ அறிவாய். அப்போது நகம் முதலியனவும், பிற எல்லா உறுப்புக்கும்