பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



52

கொள்வதும் கொடுப்பதும் கூடாது என்பார்கள். அவ்வாறு சம்பந்தம் செய்து பிறக்கும் குழந்தைகள் நன்றாக வாழ மாட்டா என்று கண்டு பிடித்துள்ளனர்.

இரா:-ஆமாம். ஆமாம். உண்மைதான். மாடுகள் கூடக் கலப்பால் தானே நல்ல சாதிகளாக அமைகின்றன. ஐயா! எனக்கு இன்னொரு சந்தேகம்

முரு:-என்ன அப்பா அது ? நன்றாய்க் கேள்.

இரா:-ஆமாம். இப்படி ஒரு நியதிக்கு உட்பட்டுத்தானே கருவயிற்றில் வளர்கிறது. பின் சிலருக்கு ஏன் குறைப் பிரசவங்கள் உண்டாகின்றன?

முரு:-இது நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்விதான். இந்தப் குறைப்பிரசவங்களுக்குப் பெரும்பாலும் நாமே காரணமாகின்ருேம். நான் முதலில் சொன்