பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53

னது நினைவிருக்கும். ஆணிலிருந்து பெண்ணின் கருவறைக்குச் செல்லும் அந்தக் கரு வழியில் வாயிற் படியிலேயும் உள்ளே குழாயாகிய தாழ்வாரத்திலும் தங்கும். தங்கி அங்கேயே வளர ஆரம்பிக்கும். இப்படி வீட்டிற்குள் செல்லாது இந்த வழியிடத்தில் எத்தனை நாளைக்கு இருந்து வளர முடியும் வழியிலும், வரப்பிலும் விழும் விதைகள் முளைத்துப் பயன் தருமா ? அப்படியேதான் கருவும்.

இன்னொன்றும் முக்கியம். கருவறையிலே சென்று தங்கும் கருவும் கூடச் சில சமயங்களில் கெடுவது உண்டு. அதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. தாய் தந்தையரிடம் பரம்பரையாக இருந்து வரும் சில நோய்கள், தாயிடம் இரத்தம் குறைவாக இருக்கும் நிலை, கருப்பையிலோ கருவறையிலோ குறை உண்டாதல், இப்படிப் பல வகையில் கருக் கெட்டுக் குறைப் பிரசவமாதலும்

பா. 4.