பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54

உண்டு. மேலும் தாய்க்கு எதிர்பாராது உண்டாகும் மனத்தளர்ச்சி, நோய், திடுக்கிடும் செய்தியால் நடுக்கம் முதலியவற்றாலும் குறைப் பிரசவம் உண்டாகும். மற்றும் அடிபடுதல், அம்மை முதலிய தொத்து நோய் உண்டாதல், அளவுக்கு மீறி மருந்து உண்ணல் முதலியனவும் கருச்சிதைவுக்குக் காரணங்களாம். முக்கியமாகக் 'கொயினா' என்னும் மருந்தைக் கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிடக் கூடாது. என்ன? விளங்குகிறதா? இவைகளைத் தவிர்த்து, பெண்ணின் கருப்பை வளர்ச்சி அடையாத நிலையிலும், அது மாறி அமைந்திருந்தாலும் மிக எளிதாகப் பிறழக் கூடியதாக இருந்தாலும் குறைப் பிரசவம்தான் உண்டாகும்.

இரா :-ஆமாம். இவற்றையெல்லாம் தடுக்க முடியாதா?

முரு :-ஏன் முடியாது? எல்லாவற்றையும் முடியாவிட்டாலும் சிலவற்றை