பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



55

நீக்கலாம். இயல்பாகவே கருப்பை முதலியன கெட்ட நிலையில் இருந்தால், அதை ஒன்றும் செய்ய இயலாது. ஆனல் இரத்தம் குறைந்தவருக்கு அதைச் சரிக் கட்டப் பல மாத்திரைகள் தரப்பெறுகின்றன. 'கொயினா' முதலிய மருந்துகளைக் கருவுற்ற பெண்கள் உண்ணலாகாது. பெண்கள் நன்றாக உழைக்க வேண்டும். கருவுற்ற காலத்தில் சோம்பலே கூடாது.

இரா:-ஆமாம், நன்றாக உழைக்கும் பெண்களுக்குக் கஷ்டம் இல்லாமல் சுகப்பிரசவம் உண்டாகும் என்கிறார்களே, அது உண்மையா ?

முரு :-அதில் சந்தேகம் என்ன? கட்டாயம் அது உண்மைதான். வேலை செய்பவருக்கு உடல் உறுப்புக்கள் வலுவடையும். கெட்ட நீர் வியர்வையாகவும் பிறவாகவும் உடலை விட்டு நீங்கும். பெண்கள் பிள்ளையைப் பெறும்போது அதிக