பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56

சக்தியை உபயோகிக்க வேண்டி இருக்கும். நன்றாக உழைத்த உறுப்புகளுக்கு, குழந்தை பிறக்கும் போது அந்தச் சக்தி இயல்பாக உண்டாகி விடும். இல்லாத சோம் பேறிப் பெண்களுக்குத்தான் தொல்லை. அவர்கள் குழந்தை பெறுவதென்றால் டாக்டர்கள் உதவி தேவை. நாள்தோறும் ஒழுங்காக வேலை செய்து முறையான வாழ்க்கை வாழும் எந்தப் பெண்ணுக்கும் நல்ல பிரசவம் உண்டாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி முதலியவற்றால் அன்றிக் குறைப் பிரசவங்களே உண்டாகாது. அதனால்தான் உழைக்கும் பெண்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்.

இரா.:-ஐயா, பிள்ளைப் பெறுவதைப் பற்றி இன்று இவ்வளவு உண்மைகளையும் மேல் நாட்டார் தாம் கண்டு பிடித்தார்களா? கருவின் வளர்ச்சி பற்றி நம் நாட்டில்கூடப் பழங்காலத்தில் யார்யாரோ