பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



59

பாதி என்றார், எல்லோரும் இதை நினைவில் வைத்துக் கொள்வார்களல்லவா.

இரா:-அடடா! எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் யார் யார் என்னென்ன சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா?

இரா:-சொல்லுகிறேன் கேள். கரு முதலில் குழம்பாக இருந்து பிறகு கட்டியாகி, பின் மூளை, கரு நரம்பு, வெண்மையான எலும்பு, தோல் முதலியன உண்டாகப் பெற்று உருவாகும் என்று சொன்னேன் அல்லவா. இதை இன்று மேல் நாட்டார் ஆராய்ந்து கண்டு பிடித்தார்கள். இந்த உண்மையை ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன் நம் நாட்டில வாழ்ந்த அபபர் என்னும் திருநாவுக்கரசர்.

'கருவாகிக் குழம்பு இருந்து கலித்து - மூளை

  கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து 
 ஒன்றாகி, உருவாகிப் புறப்பட்டு '