பக்கம்:தாயுமானவர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் & 95 & கத்தையும் மேலிரண்டு பாசங்களாகக் கருதும் முறையும் உண்டு. அடிகள், 'எம்மை வினையை இறையைஎம் பால்காட்டாத அம்மை திரோதை அகலும்நாள் எந்நாளோ!' - எந்நாட். தத்துவமுறைமை 24 என்று கூறுவர். 'உயிராகிய நம்மையும், நம்மைப் பற்றி யுள்ள வினையையும், இறைவனையும் நமக்குத் தோன்றாத படி மறைக்கின்ற இறைவனது மறைப்பாற்றலை விட்டு நீங்கும் நாள் எந்த நாளோ?' என்பது இதன் பொருள். மேலும், "சன்னல் பின்னலான சகலமெனும் குப்பையிடை முன்னவன்ஞா னக்கனலை மூட்டும்நாள் எந்நாளோ!' - மேலது 25 என்பர். 'சன்னல் பின்னலான தத்துவக் கூட்டமாகிய குப் பையை ஞானத்தியால் இறைவன் எரித்தொழிப்பது எந்த நாளோ” என்பது இதன் பொருள். இவற்றால் அடிகள் ஐவகைக் கட்டையும் உயிர்நீக்கப் பெறவேண்டும் என்பதை வற்புறுத்தியதை அறியலாம். இன்னும் எல்லாத் தத்துவங்கட் கும் வேறாக நிற்கும் நமது உயிரினை நாம் அறிதல் வேண்டும் என்பதை, 'தத்துவமாம் பாழ்த்த சடவுருவைத் தான்சுமந்த சித்துருவாம் எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ? - எந்நாட். தன்னுண்மை 3 என்ற கண்ணியால் புலப்படுத்துவர். இவ்விடத்தில் நாம் தத்துவங்கள் யாவும் சடம் என்பதை யும், உயிர் அவற்றின் வேறாக அறிவுப் பொருள் என்பதை யும் தெளிதல் வேண்டும். இதனை அடிகள் எந்நாட்கண்ணி தன்னுண்மை என்னும் பகுதியாள் தெளிவுறுத்துவார். உடல் முதலியவற்றிற்கு வேறாகவுள்ள உயிரைக் காண்பது எப் போது? (3), ஐம்பொறியை உயிர் என்று கருதும் சிறுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/115&oldid=892104" இலிருந்து மீள்விக்கப்பட்டது