பக்கம்:தாயுமானவர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ 96 శః தாயுமானவர் எப்போது ஒழியும்? (4), அந்தக்கரணத்தை உயிரென்று கொள்ளும் தப்பெண்ணம் நம்மைத் தனியே காண்பதெப் போது? (5), சத்துவம் இராசதம், தாமதம் என்ற முக்குணத் தைச் சீவன் என்னும் மூட்க் கொள்கையைவிட்டுத் திருவரு ளின் துணைகொண்டு நம்மை அறிந்து கொள்வதெப்போது (6) என்று கூறுவதால் இதனைத் தெளியலாம். உயிரின் வேறாய தத்துவங்களனைத்தையும் எந்நாட் கண்ணியுள் தத்துவ முறைமை' என்னும் பகுதியுள் அடிகள் அழகாக வகுத்துக் காட்டியுள்ளார். இருபத்தேழு கண்ணகளில் (1-27) இவை தெளிவுறுத்தப் பெற்றுள்ளன. ஐம்பூதங்க ளால் அலைக்கழிதல் (1), சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் ஐம்புலன்களிலே திரியும் ஐம்பொறிகளாகிய ஆசைக் கள்வரால் உயிர் துன்புறுதல் (2), வாக்காதியான கன்ம மாயை தம்பால் வீண் காலம் போக்குதல் (3), சுத்த வித்தை முதலான ஐவகைத் தத்துவத்தை நீக்கி அருள் சாரும் நாளைக் காணுதல் (12), சஞ்சிதம் முதலிய முச்சேறும் வெந்த பொரியாதல் (21) - இங்ங்னம் துன்பங்களை உயிர் ஒழித்த விடத்தேதான் உயிருக்குத் திருவருள் சுரக்கும் என்பதை அடிகள் தெளிவுறுத்துவர். (4) உயிர்கள் பல: இறைவன் உயிருக்கு உயிராக உள்ளார் என்பது சித்தாந்த உண்மை. இதனை, 'உயிருக்குயிராய் எந்நாளும் ஓங்கா நிற்பர்' - மேலது 14 என்னும் அடிகளின் திருவாக்கால் அறியப்படும். பதி' என்ற கடவுட் பொருள் ஒன்றேயாகும் என்பது சித்தாந்தம். ஆனால், உயிர்கள் அளவிறந்தன. அதனால் இறையை "ஏகன்' என்றும், உயிரை "அநேகன்' என்றும் வழங்குவர். ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!' என்பது மணிவாசகம். அடிகளும், 1. திருவா. சிவபுரா, அடி 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/116&oldid=892105" இலிருந்து மீள்விக்கப்பட்டது