பக்கம்:தாயுமானவர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மாவின் அருங்குணங்கள் 哆 99 够 பாடற் பகுதியில் இந்நிலையைக் காணலாம். இது, தீயில் காய்ச்சின இரும்பு நெருப்பேயாகாமலும், நெருப்பினைப் போல் அழல்வதால் அதற்கு வேறாகாமல் அதன் மயமாய் நிற்றலும் போல, குணம் குறியாதும் விளங்காமல் ஆணவத் தில் அழுந்தி அதன் மயமாய் அறியும் தன்மை யாதும் இன்றி அறிவின்மை வடிவாயிருந்த எனக்கு' என்பது இதன் பொருள். உடல், பொறி, கரணம் முதலிய எதுவும் இல்லா மல் அறியாமையே வடிவமாய்க் கிடக்கும் இந்நிலையை 'இருள்நிலை என்று வழங்கலாம். 'உயிர் என்பது ஒன்று இல்லை என்று சொல்லாமல் உள்ளது' என்பது மட்டும் கூற நிற்பதால், இது தன் உண்மை’ என்று கூறப்பெறும்.' (ஆ) சகல நிலை: இருள் நிலையாகிய கேவலத்தில் உயிர் மூழ்கிக் கிடக்கும் கொடுமையைக் கண்டு கண்ணுதலான இரக்கம் கொண்டு தன் கருணை காட்டுகின்றான். உயிரினி டம் அறியாமையைத் தந்து நிற்பதாகிய ஆணவமலத்தைப் போக்குதற் பொருட்டு மாயை, கன்மம் என்ற இரண்டு மலங்களையும் கூட்டுவிக்கின்றான். இதனால் ஆணவ மலம், சிறிதே நீங்கப் பெற்ற உயிர், உடல், பொறி, கரணங்களைப் பெற்று விண்மண் பாதலம் என்னும் மூவுலகங்களிலும் "புல்லாய்ப் பூண்டாய்.... கல்லாய் மனிதனாய்... முனிவராய் தேவராய்.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்து' உழலும் நிலை சகலம் எனப்படும். சகலம் - கலையோடு கூடுதல் எனப் பொருள்படும். கலை என்பது மாயா காரியம். இந்நி லையில் (சகலாவத்தையில்) உயிருக்கு அறிவு இச்சை செயல் ஆகிய அனைத்தும் உண்டு. இந்நிலையில் உயிர் பெரிய பொருளை அறிய மாட்டாது; சிறிய பொருளைய்ே பெரிதாக மயங்கி அவற்றை அடைய விரும்பி முயலும். அருளினால் அளவிலாத தனு. நல்லருள் மறந்திடும் சிறியனேனும் என்ற பாடற் பகுதியில் இந்நிலையைக் காணலாம். இது, 'நீ உன் பேரருளினால் புறக்கருவிகள் அகக்கருவிகளோடு கூடிய 3. எந்நாட்கண்ணி - தன்னுண்மை என்ற தலைப்பில் உள்ள எட்டுக் கண்ணிகளி லும் இதனைக் காணாம். 4. திருவா.சிவபுரா, அடி (26-31)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/119&oldid=892108" இலிருந்து மீள்விக்கப்பட்டது