பக்கம்:தாயுமானவர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 100 哆 தாயுமானவர் எண்ணற்ற உடம்பு முதலியவற்றையெல்லாம் நல்கிய போது, அங்ங்னம் இவற்றை அளித்த உன்னை அறிந்து உன்னோடு பிரியாத வண்ணம் நின்றிடாமல் பல நிறங்களை யும் தன்பால் கவர்ந்து கொள்ளும் இயல்புடைய பளிங்குக் கல்லைப் போலப் பல பொருள்களிலும் பற்று வைத்து மாயை என்னும் பெரிய கடலிலே ஆழ்ந்து நீ கொடுத்தருளும் பிரசாதமாகிய சிறந்த அருளை மறந்து விடுகின்ற சிறியேனா கிய நான் என்பது இதன் பொருள். இந்த நிலை சிற்றறிவு, சிற்றிச்சை, சிறு தொழில் இவற்றை உடையதாகும். இந்நிலை 'மருள்நிலை' என்று வழங்கப்பெறும். (இ) சுத்த நிலை: மேற்குறிப்பிட்ட விண் மண் பாதலம் என்னும் மூவுலகங்களிலும் மாறிமாறிப் பிறந்து இன்பத்தைப் பெறவும் துன்பத்தைப் போக்கவும் விரும்பும் உயிர் அவற் றிற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து அறிகின்றது. அவ்வழிக ளில் முயன்று எண்ணிய பயன் எண்ணியவாறே கைகூடுமா யின் இன்பத்தை அடைகின்றது. கைகூடாதவழி துன்பத்தை நுகர்கின்றது. விருப்பு வெறுப்புகளையும் அடைகின்றது. இந்தச் சுழற்சியால் ஆணவ மலத்தின் ஆற்றல் மெலிவடைவ தால் சிறு பொருள்களின் மீதுள்ள நாட்டம் மாறிப் பெரும் பொருளை அடையும் நோக்கம் உண்டாகின்றது. அப்பொ ழுது இறைவன் குருவாகி வந்து முப்பொருள்களின் (பதி, பசு, பாசம் என்பவற்றின்) உண்மைகளை உள்ளவாறு உணர்த்தி மெய்யுணர்வைத் தருகின்றான். இந்த மெய்யுணர் வால் உயிரின் மலங்கள் அகலுகின்றன. இதனால் நின்மலனா கிய இறைவனை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை எய்தப் பெறுகின்றது. இந்த நிலையே சுத்தம் என்று வழங்கப் பெறு வது. மாசாகிய மலங்களினின்றும் முற்றிலும் நீங்கி உயிர் தூய்மை பெற்றதால் சுத்தாவத்தை என்ற திருப்பெயரைப் பெறுகின்றது. இந்நிலையில் உயிர் இறைவனது அருளையே பற்றுக் கோடாகக் கொண்டிருப்பதால் இந்நிலையை அருள் நிலை என்று வழங்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/120&oldid=892110" இலிருந்து மீள்விக்கப்பட்டது