பக்கம்:தாயுமானவர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவானந்தமயமாகவும் உணரும் நிலை. இது மாசில்நனவு எனவும் பெயர் பெறும். இதற்கு இடம் நெஞ்சு (இதயம்). அமல சொப்பனம் என்பது சிவோகம் பாவனை செய்வது. இது மாசில் கனவு என்று வழங்கப்பெறும். சிவத்தோடு இரண்டறக் கலந்ததாகத் தன்னைப் பாவித்தல் சிவோகம் பாவனையாகும். இதற்கு இடம் கழுத்து. அமல சுழுத்தி என்பது, மூலாதாரத்தில் அறியப்படும் கடவுளையும், அறிவையும் தன்னையும் ஆன்மா உணர்ந்து நிற்பதாகும். இது மாசில் துயில் எனவும் கூறப்படும். அமல துரியம் என்பது, கேவலம் நீங்கி அருளினாலே தன்னையும் அருளையும் கண்டு தன் வசத்தழிந்து அருள் வழித்தாய் நிற்பது. இது மாசில் பெருந்து யில் ஆகும். இதற்கு இடம் புருவநடு: அமலதுரியாதீதம் ஆவது, பிரம சந்திரத்திலே எல்லையற்ற சிவத்தை இரண்டறப் பெற்று நுகர்ந்து ஆனந்தத்தில் அழுந்தி நிற்பது. இதுவே மாசில் ஒடுக்கம் எனவும் வழங்கப்படும். இங்ங்ணம் உயிர்களின் பண்புகள் தெளிவாக விளக்கப் பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/131&oldid=892122" இலிருந்து மீள்விக்கப்பட்டது