பக்கம்:தாயுமானவர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் குறிப்புகள் & 113 & என்றால் என்ன? உலகில் பல வகையாகக் காணப்படும் பொருள்களாய்ப் பரிணமிக்கக் கூடிய பலவகைச் சக்திக ளின் தொகுதி மாயை' எனப்படுவது. இந்த மாயை சுத்தமாயை, அசுத்த மாயை என இருவகைப்படும். இந்த இருவகை மாயை களினின்றே தத்துவங்கள் தோன்றும்; தத்துவங்களினின்றே உலகம் தோன்றும். தத்துவங்கள் அகக்கருவி, புறக்கருவி என இருவ கைப்படும். அகக்கருவிகளில் ஆன்மதத்துவம் - 24-உம், வித்தியாதத்துவம் 7-உம், சிவதத்துவம் 5-உம் அடங்கும். புறக்கருவிகளில் பூதகாரியங்கள் 25.உம், நாடிகள் 10-உம் ஏடணை 3-உம், வசனம் முதலிய 5-உம், குணங்கள் 3-உம், வாக்குகள் 4-உம் அடங்கும். இவற்றின் விரிவு பின்வருமாறு: அகக்கருவிகள் - 36 ஆன்மதத்துவம்: 1. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் (தமிழில் நிலம், நீர் தி, வளி விசும்பு) என பூதங்கள் 5 2. சுரோத்திரம், துவக்கு, சட்சு, சிங்துவை, ஆக்கிராணம் (தமிழில் மெய், வாய், கண், செவி, மூக்கு) என ஞானேந் திரியங்கள். 5 3. இவற்றின் விடயமான சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் (தமிழில் ஒசை, ஊறு, உரு, சுவை, நாற்றம்) என தந்மாத்திரைகள். 5 4. வாக்கு, பாதம், பாணி பாயு, உபத்தம் (மொழி, கால், கை, எருவாய், கருவாய்) என கன்மேந்திரியங்கள். 5 5. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என அந்தக்கரணங்கள் (உட்கருவிகள்) 4 ஆக 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/133&oldid=892124" இலிருந்து மீள்விக்கப்பட்டது