பக்கம்:தாயுமானவர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சித்தமெனும் பெளவத் திரைக்கடலில் வாழ்துரும்பாய் நித்தமலை யாதருளி நிற்கும்நாள் எந்நாளோ?” - எந்நாட். தத்துவ முறைமை 10 என்று பாடுவர் அடிகள். இதே கருத்தை இன்னொரு பாடலி லும், 'ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்அடிமை பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே, 38 و grtفfraيسة سسس என்று காட்டுவர். இந்தச் சித்தம் தெளிந்த நிலையில் அமைய வேண்டும் என்று அவாவி நிற்கும் அடிகள், 'சித்தம் தெளிந்தோர் தெளிவில் தெளிவான சுத்த சுகக்கடலுள் தோயுநாள் எந்நாளோ?” - எந்நாட். ஆனந்த இயல்பு 2 என்று பாடுவர். புத்தி: குணதத்துவத்தின் ஒரு கூறில் சாத்விக குணம் மிக்குடையதாய்ப் புத்தி என்னும் அந்தக்கரணம் தோன்றும். இஃது ஆன்மா தான் ஐயுற்று நின்ற ஒன்றை இன்னதே எனத் திட்டமாகத் துணிதற்குக் கருவியாகும். புத்தி தத்துவம் இல் லையேல் ஒரு பொருள் இன்னது எனத் திட்டமாக உணரும் நிலை உண்டாகாது. இந்த உணர்வு சவிகற்பஞானம் (பெயர் முதலிய பாகுபாடுகளோடு கூடிய ஞானம்) எனப் பெயர் பெறும். சவிகற்பகமாக உணரும் சிறப்புணர்வு புத்தி தத்து வத்தில் உண்டாவதால், அதுவே பின் துணியப்பட்ட அந்தப் பொருள் வடிவாய்த் திரிந்து (பரிணமித்து) நிற்கும். இதனால் ஆன்மா நேரே பற்றி அநுபவிப்பது புத்தி தத்துவத்தையே யன்றிப் புறப்பொருளையன்று. எனவே, புறத்திலுள்ள கண் முதலிய பொறிகள் வாயிலாகவும், பின் மனத்தின் வாயிலாக வும் புத்தியைத் திரிவுபடுத்தி நிற்பனவேயன்றி ஆன்மாவால் நேரே அநுபவிக்கப்படுதல் இல்லை என்பதை உணர்தல் வேண்டும். தாயுமான அடிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/144&oldid=892136" இலிருந்து மீள்விக்கப்பட்டது