பக்கம்:தாயுமானவர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 144 தாயுமானவர் 姿 拳 பற்றிப் பிடித்துக் கொண்டு தன் உடலின் மற்றப் பகுதியி னால் புதிய இடத்தைத் தாவிப் பிடிக்கும். அப்படிப் புதிய பற்றுக்கோடு கிடைத்ததும் அது பழைய இடத்தைத் தவிர்க் கின்றது. இப்போக்கில்தான் சீவர்கள் கணக்கிலடங்காத உடல் களிலும், வாழ்க்கை முறைகளிலும் பற்றுதல் வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். உயிர்களில் மனித மனம்தான் சிறந்தது. ஆனால், மனத் தின் தொடக்க நிலையின் அறிகுறிகள் சிற்றுயிர்களிடத்தும் உள்ளன. மனிதனிடத்து மனம் மிகவும் பக்குவமடைந்த நிலையில் உள்ளது. இந்த மனத்துடன் அவன் எதைப் பற்றிப் பிடிக்கின்றானோ அதன்மயமாகி விடுகின்றான். 'உலகப் பொருள்களைப் பற்றினால் அவன் உலகமயமாகின்றான். இறைவனுடைய அருளைப் பற்றினால் அவன் இறைவன் ம்யம் ஆகின்றான்." நல்ல மனத்தைப் பெற்றிானபிறகு அதன் துணை கொண்டு அருளைப் பற்றாது அழிந்துபோம் பொருள்களைப் பற்றுவானாகில் அவன் மனம் பாழும் சிந்தை ஆய்விடுகின்றது. உலகப் பொருள் யாவும் காலக்கிரமத்தில் பாழாய்ப் போய்விடுகின்றன. பாழாகப் போகும் சிந்தை யைப் 'பாழும் சிந்தை' என்று பகரலாமன்றோ? பற்றுதல் மயமாகி இருக்கும் சிந்தையைக் கொண்டு இறைவனைப் பற்றுதல் வேண்டும். 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' என்பது தமிழ் மறை. ஆனால், பொல்லாத மனம் அவ்வரிய செயலைச் செய்வதில்லை. இறைவனிடத்துப் பற்று வைக் கின்றவர்கட்கு இறைவனே கிட்டுவன் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தால் இறைவன் பற்று சிறிது 13. சார்ந்ததன் வண்ணமாதல் - என்ற சைவ சித்தாந்தக் கருத்துடன் வைத்தெண் னக் கூடியது. அதாவது பசு (ஆன்மா) இறைவனைச் சாருங்கால் இறைவனாக வும், பாசத்தைச் சார்ந்தால் பாசமாகவும் மாறும். நிலத்தில் பால் நீர்திரிற்றாகும். (குறள் - 452) என்றார் வள்ளுவர் பெருமானும். 14. குறள் - 350 (துறவு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/164&oldid=892158" இலிருந்து மீள்விக்கப்பட்டது