பக்கம்:தாயுமானவர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 శ % மனத்தின் இயல்புகள் 令 3. சிறிதாக உண்டாகும். ஆனால், மானிட சிந்தை இதற்கு இடம் தருவதில்லை. பயன்படாத பாழ்த்த பொருள்களைப் பற் றியே பகர்ந்து கொண்டிருப்பதற்கு அது துண்டுகின்றது. இக்கருத்துகளைத் தொகுத்து அடிகள், 'பற்றுவெகு விதமாகி ஒன்றைவிட் டொன்றனைப் பற்றிஉழல் கிருமிபோலப் பாழ்ஞ்சிந்தை பெற்றநான் வெளியாக நின்னருள் பகர்ந்தும்அறி. யேன்." - மெளனகுரு 10 என்று கூறுவர். மேலும், அவர் ஐம்புலன்களின்வழிச் செல்லாது மனம் உலகொடு கலந்துள்ள முதல்வன்பாற் சென்றால் திருத்தம டையும் எனக் கருதுகின்றார். "வேட்டைப் புலையர் மேவாத வண்னம்மனக் காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ?” - எந்நாட். தத்துவமுறைமை - 6 என்ற கண்ணியில் இதனைக் காணலாம். மனம் திருந்தி அதன்கண் திருவருளாகிய மரம் முளைத்து வளருமாயின் அம்மரத்தின் அடியில் இறைவன் குருவாயிருந்து அருள் புரிவார் என்பது அடிகளாரின் நம்பிக்கை. இதனை, 'மனதேகல் லால்எனக் கன்றோ - தெய்வ மெளன குருவாகி வந்துகை காட்டி எனதாம் பணியற மாற்றி - அவன் இன்னருள் வெள்ளத்(து) இருத்திவைத் தாண்டி’ - ஆனந்தக்களிப்பு - 12 என்று கூறுவார். புலன்களின் கொடுமையைத் தாங்க முடியா மல், "விஞ்சுபுலப் பாடனைத்தும் வீறுதுன்பம் செய்யஅந்த அஞ்சுபுலி வேடருக்கும ஆற்றேன் பராபரமே!’ - பராபரம் 265 என்று இறைவனிடம் முறையிடுகின்றார். மற்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/165&oldid=892159" இலிருந்து மீள்விக்கப்பட்டது