உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாயுமானவர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் 令 149 <> முயற்சியில் உயிரின் அறிவு அந்தப் பொருளில் அழுந்தியவி டத்து அது விரிவடையாது அந்தப் பொருளின்கண் ஒடுங்கிப் போதலால் அணுவாய்ச் சுருக்கிடும் என்கின்றார். இங்ங்னம் எல்லாவகையான வஞ்சனைக் கூத்தின் வித்தைகளனைத்தை யும் மனம் என்னும் ‘மாயாதத்துவம் செய்யவல்லது. அஃது இயற்கையில் நல்லறிவில்லாத என் வயப்பட்டு அடங்குமோ? என்கின்றார். எத்தனையோ விதமான உலகப் பற்றுகளில் உயிரினைத் தந்திரமாக மனம் அழுந்துதலால் அதனை வெல் லுதல் அரிது என்கின்றார். மனத்தின் பொய்ப் பாவனைகளைச் சில எடுத்துக்காட்டு களால் அடிகள் விளக்குவது இனிதாக அமைகின்றது. இதனை ஒரு பாடலில் (சச்சிதானந்தசிவம் - 4) காணலாம். கண்ணினை மூடி விழித்தற்குரிய கணப் பொழுதை உலகம் தோன்றி ஒடுங்கும் வரையுள்ள கற்ப நீடுழி காலமாகத் தோற் றுவிக்கும்; நிலையில்லாத இந்த உலகத்தை எவ்வளவோ சிறந்த உலகமாக நினைக்கும்படிச் செய்துவிடும். மகளிற்பாற் பெறக்கூடிய சிறிய அளவுடைய இன்பத்தைப் பெரிய மேரு வின் அளவினதாகக் காட்டிக் குடும்பச் சுமையை எடுக்கு மாறு நம்மைத் தூண்டித் தன்னையே சும்மாடாக (சும்மாடு - சுமையை அடுத்திருப்பது) வைத்து நம்மைச் சுமையாளா கவே செய்துவிடும். மற்றும், நாடோறும் நமக்குக் கெடும தியை அளித்து நல்லறிவு அனைத்தையும் சூறையிட்டு இந்திர சாலம் போன்ற சூழ்ச்சிகள் மிக்க ஒரு வாழ்க்கை நாடகத்தை நடிக்கும். இம்மனத்தின் வியத்தகும் இயல்பு சொல்லுந்தர மன்று. 'இறைவனே, நின் திருவருளைப் பெற்ற பேர்க்கெல் லாம் ஒளியோடு விளங்குகின்ற இந்த மனம் அருள் தன்மையு டையதா? அல்லது மருள் தன்மையுடையதா? இந்த நுட் பத்தை நீ எனக்குச் சொல்ல வேண்டும்’ என்கின்றார். திருந்தா மனத்தை அடக்குதல் அருமை என்பதை ஒரு பாடலில் தேசோமயானந்தம் - 8) ஒப்புமை நயம் விளங்க உரைக்கின்றார். நம்மிடம் உள்ள மனத்தின் தன்மையை உணர்ந்தால் அது நமக்கு அடங்கிவிடும். சான்றோர் சொன்ன உண்மை இதுதான். இதை உணர்ந்தவர் தாயுமானவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/169&oldid=892163" இலிருந்து மீள்விக்கப்பட்டது