பக்கம்:தாயுமானவர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 重50 令 தாயுமானவர் உணர்ந்த பின் பாடுகின்றார். கட்டுத் தறிகளை முறித்துவிடும் மத யானையை வசப்படுத்தி நடத்தலாம். கரடி, புலி இவற் றின் வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின் முதுகில் ஏறி சவாரி செய்யும் அளவிற்கு அதை அடக்கியாளலாம். நச்சுப் பாம்பு களையும் எடுத்து ஆட்டுதல் கூடும். நீர்மேல் நடக்க லாம். நெருப்பின்மேல் அமர்ந்து இருக்கலாம். வெய்தாகிய நெருப்பில் ஐந்து உலோகங்களையும் இரதகுளிகையிட்டுப் பொன்னாக்கி அதை விற்றுப் பொருள் பெற்று நுகரலாம்; வேறொருவர் காணாமல் இவ்வுலகத்தில் உலாவலாம்; விண் ணவர்களையும் ஏவல் கேட்கச் செய்யலாம். வாழ்நாள் முழு தும் இளமையோடிருக்க வகை செய்யலாம். ஒப்பற்ற அட் டமா சித்திகளையும் பெற்றுவிடலாம். ஆனால், ஒன்று முடி யாது; இவற்றையெல்லாம் செய்ய வல்லவர்களாலும் முடி யாத ஒன்று அது. 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது....” இவண்கூறிய சித்திகளிளெல்லாம் மனம் ஈடுபட்டு அழுந்திய உலகத்தின்கண் உள்ள பொருள்கள். இவை மணிமந்திரம் மருந்து முதலியவற்றைச் செம்மைப்படுத்திக் கொள்வதால் வருவன. உலகப் பற்றை ஒழியாமலே இவற்றை முடிப்பதை விட உலகப் பற்று ஒழித்தல் அரிதாதலின் இவ்வாறு கூறினார். எத்தகைய சித்திகளைப் பெற்றாலும், சினம் அடங்கப் பெற்றாலும் மனத்தை அடக்க முடியாதவர்கட்கு வாய்ப் பேச்சினால் என்ன பயன் என்பதை, 'சினம்இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம்இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே!” - பராபரம் - 189 என்ற பாடலால் புலப்படுத்துகின்றார். மனம் நெடுநாள் பழகிய பழக்கத்தால் அது நம் வழிக்கு வருவதில்லை. நாம் அது போனபோக்கில் செல்லாமல் நல்லதொன்றை நாடும் போது அது மல் வீரரைப் போன்று நம்மை வந்து எதிர்க்கும் என்கின்றார் அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/170&oldid=892165" இலிருந்து மீள்விக்கப்பட்டது