பக்கம்:தாயுமானவர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் & 151 & 'வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம் ஏதுக்குக் கூத்தாடுது எந்தாய் பராபரமே!’ - பராயரம் 170 என்றது காண்க. பிறிதோர் இடத்திலும் மல்லரைப்போல் வாதாடாமல் அமைதியாக இருக்குமாறு மனத்தைத் தெருட்டு 'ஏதுக்குச் சும்மா இருமனமே யென்றுனக்குப் போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய்? - வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் வாதாடி னாயே,யுன் புந்தியென்ன? போதமென்ன? போ!' - உடல்பொய்யுறவு 5 என்பது காண்க. 'பழக்கம் கொடிது, கொடிது’ என்பர் பெரியோர். மனம் அடக்கம் உற்றதுபோல் தோன்றினாலும் அது பழைய தீச்செ யலின்கண்ணே மீண்டும் மீண்டும் செல்லும், அங்ங்னம் செல்லின் அதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. 'சூதாடு வோர்போல் துவண்டு துவண்டுமனம் வாதாடில் என்னபயன் வாய்க்கும்? பராபரமே!” - பராபுரம் 171 என்பர் அடிகள். மனத்தினை வண்ணானுக்கு ஒப்பிடுகின்றார் அடிகள். கற்ற நற்கல்விக்கிசையத் தம்மை ஞான ஒழுக்கங்க ளிலே செல்ல இடங்கொடாது படித்த படிப்புகள் சிதறிப் பயன் இல்லாமல் போகும்படி செய்துவிடுகின்றது மனம். 'ஆடைகளை நூல் பிரிந்துப் போமாறு அவற்றைக் கல்லில் அடிக்கும் வண்ணானைப் போல் நீ என்னை இழுத்திழுத்து அடிக்கின்றாய்' என்று நெஞ்சை நோக்கிப் பேசுகின்றார். "இழுத்தடித்தாய் நெஞ்சே! நீ என்கலைகள் சோர அழுக்கடிக்கும் வண்ணார் போலாய்." - உடல் பொய்யுறவு - 65 என்ற பாடற் பகுதியில் இதனைக் காணலாம். ஒரு பாடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/171&oldid=892166" இலிருந்து மீள்விக்கப்பட்டது