பக்கம்:தாயுமானவர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 领 3. வாழ்வில் வினையின் பங்கு ళ % என்ற பெயர்களாலும் வழங்கும். இச்சூக்கும வினைகள் பின்னர் இன்ப துன்பங்களாய் வந்து பயன்தரும் பொழுது பிராரத்தம் என்ற திருநாமம் பெறும். இஃது ஊழ்வினை, நுகர்வினை என்ற பெயர்களாலும் சுட்டப்பெறும். வினையின் பயனை நுகர்தற் கேதுவாகிய புண்ணிய பாவங்கள் புத்தி தத்துவத்தில் பொருந்திக் கிடக்கும்பொழுது சஞ்சிதம் ஆகும். நல்வினையும் தீவினையும் பயிர் போல வும், புண்ணிய பாவங்கள் நெல் போலவும் புத்தி தத்துவமும் அதற்காதாரமான மாயையும் நெல் வைத்த களஞ்சியம் போல வும் இருப்பதாகக் கருதுகின்றார் அடிகள். பயிரானது வெய் யிலின் வெம்மையால் கருகியொழிவது போல இறைவனின் அருட்கதிரின் வெப்பம் தாக்க இருவினையாகிய பயிர் மாய்ந் தொழியும் என்பார், "பைங்கூழ் வினைதான் படுசாவி யாகஎமக்(கு) எங்கோன் கிரனவெயில் எய்துநாள் எந்நாளே?” - எந்நாட், தத்துவ முறைமை - 19 "நான்' என்னும் முனைப்பால் (வெளிப்படையாகச்) செய்யப்படும் வினை ஆகாமியம் ஆகும். இது முன் வினைப் பயனை நுகருங்கால் செய்யப்படுவது. வினைப் பயன் நுகர்தற்குரியதாய் வரும்பொழுது அது பிராரத்தம் ஆகும். முன்வினை, மூள்வினை, செய்வினை என்ற மூன்றும் முறையே சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் எனப் பெயர் பெறும். இம்மூன்றும், ஒழிய வேண்டும் என விரும்பும் அடிகள், "சஞ்சிதமே ஆதி சரக்கான முச்சேறும் வெந்தபொரி யாகஅருள் மேவுநாள் எந்நாளோ?” - எந்நாட் தத்துவ முறைமை 21 என்று இயம்புகின்றார். சஞ்சிதம் புசிக்கப்பட்ட பின்னரும் மேலை வினைக்கு வித்தாகத் தொகுத்து வைக்கப் பெற்ற சரக்காகும். ஆதலின் அந்த வித்தினை அருட்கதிரால் வறுத்த வித்தாக்கி விட்டால் மேல் முளைத்தற்கு வாய்ப்பு இல்லாது போகும் என்று கருதும் அடிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/189&oldid=892185" இலிருந்து மீள்விக்கப்பட்டது