பக்கம்:தாயுமானவர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 190 & தாயுமானவர் என்ற பாடற் பகுதியில் இதனைக் காணலாம். மானிட வாழ்க் கையின் முடிவான குறிக்கோள் உணவைத் தேடுவதும், எதிரியை விரட்டுவதும், தன் இனத்தைப் பெருக்குவதும் அல்ல. அதற்கு மேலான குறிக்கோள் ஒன்று உண்டு என் பதை அறிந்த சான்றோர்கள் அதை அடைவதற்கான நெறி சமய அதுட்டானம் என்பதாகக் கண்டனர். இங்ங்னம் ஆன் றோர்களால் நிறுவப் பெற்ற சமயங்கள் பல. அவற்றை எண்ணிக்கையுள் அடக்க முடியாது." ஏனென்றால் வாழ்க்கை முறையில் ஒரு மனிதன் முற்றிலும் மற்றொரு மனிதனை ஒத்திருப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் இயல்புக்கு ஏற்றபடி சமய அநுட்டானத்தைக் கடைப்பிடித்து வருகின்றான். இதனைத்தான் அடிகள் சைவம் முதல் அளவு இல் சமயமும் வகுத்து என்கின்றார். சமயங்கள் பல இருப்பத னால்தான் அவரவர் மனத்திற்குகந்த சமயம் ஒன்றை அதுட் டிக்க முடிகின்றது. சமயங்கள் எல்லாம் நெறிகள் ஆகின்றன. அவை யாவும் ஆன்மசாதகர்களை ஒரே இடத்திற்கு இட்டுச் செல்கின்றன. புறப்படும் இடங்கள் வேறுபட்டாலும் சென்றடைய வேண் டிய இடம் ஒன்றேயாகும். மலை உச்சிக்குப் போக முற்படுப வர்கள் மலையைச் சுற்றிலும் நின்று கொண்டு மேல்நோக்கி நடப்பதுபோல் பல சமயங்களை அநுட்டிக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வோர் இடத்தில் நிற்கின்றான். இடபேதத்தை முன்னிட்டுப் புறப்படும் இடங்கள் பலவாக இருப்பினும், அடைய வேண்டிய இடம் மலை உச்சியே. அங்ஙனமே, அநுட்டிக்கும் சமயங்கள் பலவாக இருப்பினும் அடைய வேண்டிய குறி ஒன்றே. இந்தக் குறி பிரபஞ்ச வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. இதனோடு அதனைச் சீர்துக்க முடியாது. ஒப்பிடுவதற்கு ஆங்கு ஒன்றும் இல்லை. ஆதலால் அதை "மனம் மொழி கடந்த மோன நிலை என்று மேலோர் மொழிந்த னர். இந்த மோன நிலையில் வேற்றுமைக்கு இடம் இல்லை. 12. மிக அண்மையில் தோன்றிய பகவான் இராமகிருஷ்ணன் சமயங்களைப் பற்றித் தமது கருத்தை வெளியிட்டுளளார். உலகில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை வித சமயங்கள் உள்ளன என்பது அப்பெருமானின் கருத்து. தாயு-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/210&oldid=892209" இலிருந்து மீள்விக்கப்பட்டது