பக்கம்:தாயுமானவர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 202 & தாயுமானவர் உயிர்கள் நிலைபெற்றிருப்பதற்கு நீர் முற்றிலும் இன்றிய மையாதது. "நீர் இன்றி அமையாது உலகம்" என்பது வள்ளு வர் வாய்மொழி. வாரி என்ற சொல் நீரைக் குறிக்கின்றது. நீருடன் ஒப்பிட்டுப் பரம்பொருள் 'சுகவாரி என்று வழங்கப் ப்ெறுகின்றது. இன்பமனைத்துக்கும் அதுவே இருப்பிடமா தலால் இச்சொல் அதற்கு மிகவும் பொருத்தமானது. நீரை வாயால் அருந்துகின்றோம். அருந்துதல் என்ற செயலை வைத்துக் கொண்டு பரம்பொருளினிடத்து நாம் பெறுகின்ற பேரானந்தத்தை அறியலாம். இதை அடிகள் 'சுகவாரி தன் னிலே வாய்மடுத்து உண்டு என்று இயம்புகின்றார். நாம் அன்றாடம் உண்ணும் உணவும் பருகும்நீரும் நம்மிடத்துச் சீவபோதத்தை வளர்க்கின்றன. உடல் அபிமா னத்தைக் காக்கவே நாம் இவற்றை ஏற்கின்றோம். இந்த உணவு நம் உடலைப் பேணுவது போன்று பரிபூரணத்தைப் பற்றிய உணர்வு பரிபூர்ணத்தின்கண் நம்மை எடுத்துச் செல் லுகின்றது. தன்னிடத்துள்ள குறைகளை நீக்குவதற்கென்றே சீவன் பல பிறவிகளை எடுக்கின்றான். குறைகளை அகற்று கின்ற அளவு புதிய குறைகளும் தோன்றிக் கொண்டே வருகின்றன. கடலில் அலைகட்குப் பிறகு அலைகள் வரு வன போன்று மனிதன் வாழ்ந்திருக்கும்வரை குறைகளும் தோன்றிக் கொண்டே வருகின்றன. உடலுக்கு வேண்டிய உணவை உண்டு கொண்டிருப்பதற்கிடையில் பசி மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பது போன்று குறைபாடுகளும் தோன்றிக் கொண்டே உள்ளன. 'பரிபூரணம்' என்னும் பார மார்த்திக நீரை அருந்தியவுடன் அது பேரானந்தத்தில் மனித னைக் கொண்டு சேர்க்கின்றது. ஆதலால்தான் அது 'சுகவாரி' எனப்படுகின்றது. அதனை அருந்தியவுடன் மனிதன் தன் வசம் இழந்து பரவசம் அடைகின்றான். பேறு அனைத்தும் அதில் அடங்கி விடுகின்றது. சுகவாரி தன்னிலே வாய்மடுத்து உண்டு அவசமாய் என்று இந்நிலையை அடிகள் விளக்குகின் றாா. 17. குறள் - 20 18. நீருக்கும் எம்பெருமானுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதை இந்த ஆசிரியர் எழுதியுள்ள வைணவ உரைவளம் (சை.சி.நூ.ப. கழகம், 154, டி.டி.கே.சாலை, சென்னை - 600 028 என்ற நூலில் (பாசுரம் 104) பக்கம் 223-228 காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/222&oldid=892222" இலிருந்து மீள்விக்கப்பட்டது