பக்கம்:தாயுமானவர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 238 & தாயுமானவர் கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டிருந்த எமை' என்று அடிகள் தம்மையே குறிப்பிட்டு உரைப்பதைக் காணலாம். உண்மையில் அவர் ஆணவத்தில் அடைபட்டவர் அல்லர் என்பதை அவர் வாழ்க்கையை அறிந்த நாம் அறிவோம். ஞானநிலையில் பரிபாகம் அடைகின்றவர்கள் தங்களிடத் துள்ள சிறு குறைகளையும் பெருங்குறைகளாகக் கருதுவர். அப்படிக் கருதுதல் ஒன்றே அந்தச் சிறிய குறையையும் களைவதற்கு உபாயமாகும். எனவே தம்மைக் குறைபாடு டையவராகக் கருதிக் கொள்ளுதல் அவருடைய சால்புக்குக் கட்டளைக் கல்லாகவும் அமைகின்றது.' இனி உருவாக இருக்கும் மரம் 'ஆலமரவித்தின் அருங்கு றள் போல் விதையினுள் மறைந்து கிடக்கின்றது. பருவ காலத்தில் மழை பெய்தால் விதை முளைத்து பூமியினின்று வெளி வருகின்றது. அன்னையின் கருவறையிலிருக்கும் சிசு அதனுள் வளர்ச்சி உறுகின்றது. அது கருவில் அடைய வேண்டிய வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் பெற்ற பிறகு தாயின் வயிற்றிலிருந்து வெளிவிடப் பெறுகிறது. அதனை வெளிவிட்டேயாக வேண்டும். இல்லாவிடில் தாய்க்கும் சேய்க்கும் உயிர்ச் சேதம் உண்டாகும். ஆணவத்தில் தோன்றி ஆணவத்துடன் வளர்ந்துவரும் மனிதன் உலக வாழ்க்கை என்னும் வெளியில் விடப்படுபவன் ஆகின்றான். இந்த நிலையை அடிகள் வெளியில் விட்டு என்று இயம்புகின்றார். முளைத்து வந்த செடி காற்றில் அசைகின்றது. இங்ங்னம் அசைதல் அதற்கு உண்டாகும் அல்லல். ஆனால் அது காற்றில் அசையாவிடின் செடி உறுதி பெறாது. அல்லல் படுவது போன்று அதன் வாழ்க்கை காணப்பெறினும் அசை தல் என்னும் துன்பம் மறைமுகமாக அதற்கு உதவி செய்கின் றது. அந்தச் செடிக்கு வேலி என்னும் காப்பு இடப்படுகின் றது. அதன் கிளைகள் படர்ந்து வளர்வதற்கு வேலி ஒரு சிறிது இடைஞ்சலாக இருக்கலாம். ஆயினும் ஆடுமாடுகள் மிதித்து 10 வைணவத்தில் நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்கள் இவ்வாறு தம்மைக் குறைபடக் கூறுவதை 'தைச்சியாதுசத்தானம்' என்று கூறுவது மரபு. நைச்சியம் - குறைவு: அதுசந்தானம் பாவித்தல். தாயு-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/258&oldid=892261" இலிருந்து மீள்விக்கப்பட்டது