பக்கம்:தாயுமானவர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 240 & தாயுமானவர் (3) செல்வ நிலைக்கேற்ப பணக்காரன், வறிஞன், குறை செல்வம் படைத்தவன், நிறை செல்வம் படைத்தவன் என் றும், (4) பொருளைக் கையாளும் முறைக்கேற்பக் கொடை யாளி, வள்ளல், பிசுநாறி என்றும் பெயர்கள் அமைகின்றன. (5) உடல்நிலையை முன்னிட்டு நோயாளி, உடல் திட் பம் படைத்தவன், மெலிந்தவன், தடித்தவன் என்று பெயர் கள் மாறி விடுகின்றன. (6) மகன், மணமகன், குடும்பி, தந்தை, பாட்டன் என்ற பெயர்கள் குடும்ப வளர்ச்சியை முன்னிட்டு மாறி விடுகின் றன. இப்படியெல்லாம் இன்னும் பலவிதமாகவும் ஒரே மனித னுக்குப் பல பெயர்கள் வாய்க்கின்றன. இவற்றையெல்லாம் கருதிய அடிகள் அதற்கு இசைந்த பெயரிட்டு என்று இயம்பு கின்றார். மனிதன் அல்லல் படுவதற்கு உடல் வாழ்க்கையே கார ணமாகின்றது. பிறந்தது முதல் மரிக்கும் வரை மனிதன் உடலைப் பேணுதலில் கவலை மிக எடுத்துக் கொள்ளுகின் றான். இந்த உடல் வியப்புக்குரியதாகின்றது. ஒன்றைக் கருதுவோம். வெட்ட வெளியில் திடீரென்று மேகம் கூடுகின் றது. காட்சியில் இல்லாதது ஒன்று காட்சிக்கு வருகிறது. அதன் வடிவம் ஒயாது மாறி அமைந்து கொண்டே உள்ளது. மழையாகப் பொழிந்தோ காற்றினால் சிதறிக் கலைந்தோ அந்த மேகம் தனது வடிவத்தை இழந்து விடுகிறது. முன்பு இல்லாதது, பின்பும் இல்லாதது, இடையில் இருப்பது போன்று தென்பட்டுக் கொண்டு இருக்குமாகில், இருப்பது போல் தோன்றுவது பொய்யானது. மேகம் போன்றது மனிதனது மேனி; உடல். பல ஆண் டுகட்கு முன் அஃது இருந்ததில்லை; பல ஆண்டுகட்குப் பின்பும் அஃது இருப்பதில்லை. இயற்கையில் பல பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/260&oldid=892264" இலிருந்து மீள்விக்கப்பட்டது