பக்கம்:தாயுமானவர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் & 253 & தந்திர மந்திரங்கள் வாயிலாக வழிபாடு நடத்தினால் அறிவு அவற்றைச் சார்ந்து நிற்குமாதலின் அவை யாவும் சடமாகிய தத்துவங்களின் அளவாக அமையும். ஆதலின் ஞானமே இறைவனது திருவுருவாகக் கருதி அவனை வழிபட வேண்டும் என்பர் அடிகள். 'தந்திரத்தை மந்திரத்தைச் சாரின்நவை ஆம்அறிவு என்று எந்தைஉணர் வேவடிவாய் எய்துநாள் எந்நாளோ - எந்நாள் நிற்.நிலை 18 என்பது காண்க. சுட்டிறந்து இறைவனை அறியுங்காலத்து அகண்டமா கிய உலகத்தை அவனது திருமேனியாகக் கருதுவார்க்கு இவ்வுலகமும் விண்ணுலகமும் ஆகிய எல்லாம் ஞானப் பெருவெளியாகத் தோன்றுமாதலின் அத் தகைய யோகமே சிறந்த யோகம் என்பார். “தாங்கியபார் விண்ஆதி தானேஞா னாக்கினியாய் ஓங்கும் யோகஉணர்வு உற்றிடுநாள் எந்நாளே” - எந்நாள். நிலைபிரிந்தோர் 11 என்பது காண்க. "ஆகாரபுவனம்’ என்பதிலுள்ள பல பாடல் கள் இந்நிலையையே காட்டுவன. (3) அருளாளர்கள் அருளிச் செயல்கள்: அருளாளர்களின் அருளிச் செயல்களில் ஆழங்கால்பட்டு அதுபவித்தலும் ஒரு வித வழிபாடேயாகும். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மணிவாசகர், திருமூலர், பட்டினத்தார், பத்திரிகிரியார், அருணகிரி நாதர் ஆகியோர்களின் பாடல்களை அநுபவித்து மகிழ்ந்தனர் என்பதற்கு அகச்சான்றுகள் உள்ளன. சமய குரவர் நால்வர் பெருமையையும் பாராட்டு முகத் தால் ஒரு பாடல்: 'அன்று.அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீஉரைத்தது ஒன்றுஅந்த வார்த்தைஎனக்கு உண்டோ பராபரமே” - பராபரம் 281

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/273&oldid=892278" இலிருந்து மீள்விக்கப்பட்டது