பக்கம்:தாயுமானவர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H வழிபாட்டு முறைகள் ళ 255 哆 % என்ற அடியில் கண்ட படிமத்தை அப்படியே மனத்தில் கொண்டு, 'சாலேகம் ஒன்பது குலாவுநடை மனையை' - சச்சிதாநந்த சிவம் 2 என்று அதே கருத்தைக் குறிப்பிடுவர். அருளாசிரியர்கள் அனைவருமே (சைவம், வைணவ ஆசிரியர்கள்) உடலைக் குறிப்பிடும்போது, 'ஒன்பது வாசல் உடையது என்று குறிப்பி டுதல் சர்வ சாதாரணம். மெய் என்று பெயர் கொண்ட உடல் முதுமையில் சோர்வில் புலன் கெட்டு, பொறி குழம்பி, நெறி தடுமாறி உயிர் வருந்தும் நிலையில் உடனிருந்து காப்பவன் இறை வனே. இக்கருத்தினைச் சம்பந்தப் பெருமான் ஐயாற்றுப் பதிகத்தில் (1.130) 'புலன்ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐமேல்உந்தி அலமந்த, போதாக அஞ்சேல்என்று அருள்செய்வான் அமருங் கோயில் (1) என்று ஐயாற்றினைப் போற்றுவார். இதனை அப்படியே, "புலனைந்தும் தானே பொர மயங்கிச் சிந்தை அலமந்து உழலும் அடிமை” - உடல்பொய்யுறவு 46 என்ற அடிகளில் அமைத்துக் காட்டுவர். (ஆ) நாவுக்கரசர் நாவுக்கரசரின் கைத்தொண்டும் மெய்த் தொண்டும் அடிகளாரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அப்பெரு மானின் உழவாரத் தொண்டும் தேவாரப் பாடல்களும் அடிக ளாரின் அகத்தில் அகலாத இடம் பெற்றுள்ளன. 'ஏரின் சிவபோகம் இங்கு,இவற்கே என்னஉழ வாரங்கொள் செங்கையர்” - எந்நா. அடியார் வண.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/275&oldid=892280" இலிருந்து மீள்விக்கப்பட்டது