பக்கம்:தாயுமானவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் திசைதிருப்பம் * 19 & யெல்லாம் கேள்வியுற்ற தமையனார் சிவசிதம்பரம் பிள்ளை பும் அவரைச் சார்ந்த சிலரும் இராமேசுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். தாயுமானவர் அவர்களை வழியில் சந்தித்த னர். தம் தமையனார் கருதியபடி இருவரும் திரிசிரபுரம் சென்றுவிட்டுப் பொருள்களை எடுத்துக் கொண்டும் அன் னையாரை அழைத்துக் கொண்டும் திருமறைக் காட்டிற்கு வந்து சேர்ந்தனர். தாயுமானவர் அங்குத் தங்கயிருந்தபொ ழுது அவரது தமையனாரும் அன்னையாரும் அவருக்குத் திருமணம் நிகழ்த்த வேண்டும் என்று வற்புறுத்தினர். தாயுமா னவர் பலவாறு மறுத்துரைத்தும் அவர்கள் இணங்காமையா லும், அதுவே குருவாணையாக இருந்தமையாலும், இறுதி யில் திருமணத்திற்கு இசைய வேண்டியதாயிற்று. 'மட்டுவார் குழலி என்ற திருப்பெயரையுடைய அம்மையாரை மணந்து கொண்டார். 'பக்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு மையல்தந் தகில மாயையைப் பாரு பார்என நடத்த வந்ததென? பாரதத் தினுமி துள்ளதோ? சுத்த நித்தஇயல் பாகுமோ உனது விசுவ மாயைநடு வாகவே செல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை' சொல்லும் மாயையினும் இல்லை.என சித்தம் இப்படி மயங்குமோ? அருளை நம்பி னோர்கள்பெறு பேறிதோ?' தாம் மெளனகுருவின்பால் அறிவுரை பெற்ற பின்னரும் இல்லறத்தில் இறைவன் தம்மைச் செலுத்தியது, தமக்கு வெறுப்பும் விருப்பும் தருவதாகும் என்று கூறுவது இப் பாடற் பகுதி. .ே காதி கதை என்பது உலகம் என்பது மனத்தின் கற்பனையன்றி உண்மையில் இல்லை என்பதற்கு ஞானவாசிட்டம் கூறும் శిష్ణోత్త. 7. சிறசகோதய விலாசம் - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/39&oldid=892324" இலிருந்து மீள்விக்கப்பட்டது