பக்கம்:தாயுமானவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களின் போக்கு శస్త్రీ 31. శ. அமைந்து படிப்போர் மனத்திரையில் படிமங்களை (imagery) உண்டாக்கிப் பாவின் சுவையை மிகுவிக்கின்றன. எ.டு: கருதரிய ஆனந்த மழை, பிரியாத பேரொளி, சோற்றுத் துருத்தி, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம், பாசக்கடல், கோதில் அமுதுற்று, அகம கிமு வரும்தேன், அருமறையின் சிரப் பொருள், சதானந்தமான பெருந்தகை, சித்தாந்த முத்திமுதல், ஆக்கையெனும் இடி கரை, கவ்வுமலமாகின்ற நாகபாசம், ஞானசஞ்சீவி, ஆணவக் கருவறை, ஞான அனல், பாச இருள், சின்மயானந்த வெள் ளம், சமரச சிவானுபூதி, ஞான கருணாகரமுகம், அமிர்த தாரை, ஆங்காரமான குலவேடர், அமுதப் பிழம்பு, காராரும் ஆணவக்காடு, சுகாரம்பம், கல்நெஞ்சம், ஆனந்த மழை, ஆனந்த வெள்ளம், பேய் மனம், குரங்கு மனம், வேட்கை மரம், அமிர்தப் பிரவாகம், கன்ம பந்தம், இருட்கடல், புத்த மிர்த போகம், சுத்தபரிபூரண அகண்டம், காமவேள் நடன சாலை, அருள்பழுத்த பழச் சுவை, அருட்கருணை, அகண்ட வாழ்வு, செம்பொன்மேனி, வஞ்சனை அழுக்காறாதி வைத்தி டும் பாண்டம், ஞானவாரிதி, வினையைக் கரைக்கும் பரம இன்ப வெள்ளப் பெருக்கு, அருளைப் பொழியும் குணமு கில், கரையிலா இன்ப வெள்ளம் காட்டிடும் முகில், செக்கர் மேனிக் கற்பகம், புன்புலால் இறைச்சிச் சடம், அம்பொன் மாமலர்ப் பதம், ஆனந்த சாகரம், தரள்புனை, அகண்டாகார சிவபோகம் எனும் பேரின்ப வெள்ளம், இதயத்தே ஊறித் தித்திக்கும் ஆனந்தத்தேன், பேய்க்குரங்கு, மின்னும் ஆனந்த விளக்கு, ஞானமத யானை, முக்கட் கரும்பு - இப்படி எண்ணற்ற உருவகங்கள் இவர்தம் பாடல்களில் பதிந்து கிடக்கின்றன; படிப்போரைப் பாடநுபவத்தைப் பெறச் செய் வதுடன் பவக்கடலைக் கடக்க வழியாகவும் அமைகின்றன. உவமைகள: உவமையணிதான் பல அணிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. இது கருதிதான் தொல்காப்பியர் 'உவமஇயல் என்ற ஒன்றை மட்டிலும் தம் நூலில் கூறியுள் ளார். உவமையிலிருந்தே ஏனைய அணிகள் தோன்றின எனபதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/51&oldid=892338" இலிருந்து மீள்விக்கப்பட்டது