பக்கம்:தாயுமானவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 32 & தாயுமானவர் "உவமை என்னும் தவலரும் கூத்தி பல்வகைக் கோலம், பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே گیاه و و என்ற வடமொழி ஆப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சைக் கூற்றினாலும் அறியலாம். தாயுமான அடிகளின் அருளிச் செயல்களில் உள்ள உவமைகள் சுவை மிக்கன. அநுபவபூர்வமாவன. எ.டு: எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல, ஆக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழியென, காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல், கருமருவு குகையனைய காயத்தின், மின்னனைய பொய்யு டல், போகை மிருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற் கிருக்குமதுபோல், பற்றுவெகு விதமாகி ஒன்றைவிட் டொன் றனைப் பற்றி உழல் கிருமிபோல, சிறுவீடு கட்டியதில் அடுசோற்றை உண்டுண்டு. தேக்கு சிறியார்கள்போல, ஊசி காந்தத்தினைக் கண்டனுகல் போல, மடல் அவிழு மலர னைய கைவிரித்து, சிங்கத்தை ஒத்தெனைப் பாயவருவினை, கடல்மடை திறந்தனைய, திக்கொடு திகந்தமும் மன வேகம் என்னவே, பதும நிதி சங்க நிதி இருபாரிசத்திலும் பணிவு செய்யும் தொழிலாளர் போல் கேட்டது கொடுத்துவர, நீரில் உறை வண்டாய்த் துவண்டு, மேருவென அசையாமல் நிற்க வல்லிர், ஆடிய கறங்குபோல, இன்னமுது கனிபாகு கற் கண்டு சீனித்தேன் என ருசித்திட, எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல் இருக்க இலையோ, கைத்தலம் விளங்குமொரு நெல்லிக் கணியென, ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம்போல் அடங்கி மனம் வீழ, மின்போலும் இடை, உள்ளங்கையில் நெல்லிக்கனி போலக் காட்சியாக, ஒருவன வன் யானை கெடக் குடத்துட் செய்கை ஒட்டுதல் போல், திரையில்லாக் கடல் போலச் சலனம் தீர்ந்து, தாயிலாச் 2. செந்தமிழ் தொகுதி-7, பக்.144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/52&oldid=892339" இலிருந்து மீள்விக்கப்பட்டது