பக்கம்:தாயுமானவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களின் போக்கு * 35 * "ஆசைக்கோர் அளவில்லை’ 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்பன அவர் பாடல்களின் தொடர்கள். "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' அவனன்றி ஓர்அணுவும் அசையாது” இவையாவும் தாயுமான அடிகள் நமக்கு அருளிய தொடர்கள். "எல்லாம் அறிந்தவரும் ஏதும்அறி யாதவரும் இல்லையெனும் இவ்வுலகம்" இதுவும் மக்களிடையே வழங்கிவரும் தொடர்; தாயுமான அடிகளின் கொடை. "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்பது தாயுமான அடிகளின் அநுபவ வாக்கு. பாடல்களின் பழைய யாப்பு: பழைய யாப்பு வழிப்பட்ட விருத்தங்கள், நீண்ட விருத்தங்கள் முதலியவை பாடியுள் எார். 'சாதி,குலம், பிறப்பிறப்புப் பந்தம்,முத்தி அருவுருவத் தன்மை நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவறநின்றியக்கம் செய்யும் சோதியை:மாத் துவெளியை மனதவிழ நிறைவான துரிய வாழ்வைத் தில்பர மாம்பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வாம்'

ேேது கி 30 6, சித்தர்கணம் - 10

ស្រៅ → 3 - - - * . . 3. தேசோமயானந்தம் .* எங்கும் திறைகின்ற பொருள் - 1 10. மேலது - 8 11. பொருள் வணக்கம் - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/55&oldid=892342" இலிருந்து மீள்விக்கப்பட்டது