பக்கம்:தாயுமானவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

领 杂 5 1. 令 % இறைவனின் திருக்குணங்கள் "ஒன்றும் தெரிந்திட இல்லை;என் உள்ளத்து ஒருவா!' - பாயப்புலி - 32 'குருவடிவு ஆன் குறைவிலா நிறைவே நின்ற ஒன்றே நிர்மல வடிவே' - அகவல் - 2,3 'மறை ஒன்றென விளம்ப" - வண்ணம் - 1 'எவையும் தன்னுள் - ஒருமுதலாகும்" - மேலது 3 "அறிவொன் றெனவிளங்கும்" - மேலது 3 என்ற திருவாக்குள் அமைந்து இது வற்புறுத்தப் பெற்றமை காணலாம். (6) கடவுள் உயிருக்குயிராய் உயிர்தோறும் கலந்து நிற்ப வன். இக்கருத்தை அடிகளின் பல பாடல்களில் கண்டு தெளியலாம். 'இகபரம் இரண்டினினும் உயிருக்கு உயிராக எங்கும் நிறைகின்ற பொருளே’ எங்கும் நிறைகின்ற பொருள் என்ற பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் இங்ங்ணம் இறுகின்றது. 'சித்தம்உளன் நான்இல்லை நீஅறிவை என்னும் வசனம்” - சச்சிதானந்த சிவம் - 7 "ஆதார ஆதேயம் முழுதும்நீ ஆதலால் அகிலமீது என்னைஆட்டி ஆடல்கண் டவனும்நீர் ஆடுகின்றவனும் நீர் அருளும்நீ” - மேலது - 10 'சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/71&oldid=892360" இலிருந்து மீள்விக்கப்பட்டது