பக்கம்:தாயுமானவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் శ 53 శ சிமவி தெய்வத் திருஅருள் அதனால் பார்முதல் அண்டப் பரப்புஎலாம் நிறுவி, அண்டசம் முதலாம் எண்தரு நால்வகை ஏழு பிறவியில் தாழாது ஒங்கும் அனந்தபோனியின் இளம்பெற மல்க, அனுமுதல் அசலம் ஆன ஆக்கையும் கணம்முதல் அளவுஇல் கற்ப காலமும் கர்மப் பகுதித் தொன்மைக்கு ஈடா இமைப்பொழு தேனும் தமக்குஎன அறிவுஇலா ஏழை உயிர்த்திரள் வாழ அமைத்தனை: - அகவல் 1-2; 7-16 என்ற பாடற் பகுதியிலும், அடி யிற்கண்ட் வேறு பல பாடல்க ளிலும் குறிப்பிட்டுள்ளார் அடிகள். 'பெருவெளியாய், ஐம்பூதப் பிறப்பு இடமாய்ப் பேசாத பெரிய மோனம் வரும் இடமாய்” - பொருள் வணக்கம் - 3 "ஐவகை எனும்பூதம் ஆதியை உகுத்து.அதனுள் அசரசர பேதம்ஆன யாவையும் வகுத்து,நல் அறிவையும் வகுத்து,மறை ஆதிநூ லையும் வகுத்துச் சைவமுதல் ஆம்அளவில் சமயமும் வகுத்துமேல் சமயம் கடந்தமோன சமரசம் வகுத்தநீ" - சின்மயாநந்தகுரு 4 'வானே முதலாம் பெரும்பூதம் வகுத்துப் புரந்து மாற்றவல்ல கோனே’’ - சொல்லற்கரிய - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/73&oldid=892362" இலிருந்து மீள்விக்கப்பட்டது