பக்கம்:தாயுமானவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 56 & தாயுமானவர் 'சுகவாரி என்ற பதிகத்தில் வரும் எல்லாப் பாடல்களும் இங்ங்னமே இறுகின்றன. இதுபோன்ற பாடற் பகுதிகள் இறைவன் இயல்பாகவே பற்றற்றவன் என்பதை விளக்கும். இறைவனுடைய நிறைவிற்குக் குறைவு எந்நாளும் இல் லையாதலின், “...குறைவிலா நிறைவே நின்ற ஒன்றே நிர்மல வடிவே குன்றாப் பொருளே." - அகவல் 2-4 என்று குறிப்பிட்டார். ஒன்றை நாடிப் போதலும் மீளுதலும் இல்லாமையான் இறைவன் போக்கு வரவு அற்றவன். 'நீக்கப் பிரியா நினைக்கமறக் கக்கூடா போக்குவரவு அற்ற பொருளனைவது எந்நாளோ?” - எந்நாள்... பொருள் இயல்பு - 4 என்பதால் இது தெளியப்படும். (9) இறைவன் இயற்கை அறிவுடையவன். அவன் உயிர் கள் எல்லாவற்றின் உடைய அறிவிற்கலந்து நின்று அவற்றை அறிவிப்பவன். உயிர்களின் உடம்பிற்குப் பூதங்கள் ஆதார மாதல்போல அவற்றின் அறிவிற்கு இறைவனது அறிவு தாரகமாயுள்ளது. 'அறிவினுக்கறிவாகி, ஆனந்தமயம் ஆன ஆதி' - பரசிவ வணக்கம் - 3 "பொருளாகக் கண்டபொருள் எவைக்கும்முதல் பொருள்.ஆகிப் போதம் ஆகித்; இருள்திர விளங்குபொருள்' - பொருள் வணக்கம் - 7 உயிரின் அறிவு விளக்கொளியும் அகல்போலவும் இறை வன் அறிவு எரியும் சுடர்போலவும் சுடர்க்குரிய விளக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/76&oldid=892365" இலிருந்து மீள்விக்கப்பட்டது