பக்கம்:தாயுமானவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் • 61 : 'உளவுஅ றிந்துஎலாம் நின்செயல் ஆம்என உணர்ந்தோர்க்கு அளவுஇல் ஆனந்தம் அளித்தனை' - எனக்கு என்செயல் - 2 என்பன போன்ற திருவாக்குகளால் இதனை அறியலாம். "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' - அப்பர் 6.95:3 என்ற தேவாரத் திருவாக்கின் கருத்தே மேற்காட்டிய பாடல்க எளின் கருத்து என்பதைத் தெளியலாம். "மாயைமுதல் ஆய்வினைநீ மன்உயிர்நீ மன்உயிர்தேர்ந்து ஆயும்அறிவு ஆனதுநீ அன்றோ பராபரமே (111) என்னறிவும் யானும்எனது என்பதுவும் ஆம்.இவைகள் நின்னளவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே (1.12) என்றவிடங்களிலும் இக்கருத்தே மிளிர்கின்றது. உயிர்கள் தமது திறமையால் நடைபெறுகின்ற செயல்க ளென்று எண்ணுகின்றன என்பதை ஆய்ந்து நோக்கினால் முடிவில் அவை பரம்பொருள்களின் செயல்களே என்பதை, 'அத்வைதவஸ்துவை (பரி பூரண - 3) என்ற பாடலில் அடிகள் மிக அழகாக வற்புறுத்துவதை அறியலாம். கருவியின் செயல் அக்கருவியுடையானது செயலே என்று ஆய்ந்தறிதல் போன்று, உலகில் திகழும் செயல்களை யெல்லாம் ஆராய்ந்து பார்ப்பின் அயன் முதலிய அமரர்களு டைய செயல்களும் சிவன் செயலேயாகும் என்பதைத் தெளி யலாம். அவர்களுக்குரிய செயலாக ஒன்றும் இல்லை. 'அருள்வடிவு ஏழுமூர்த்தம்; அவைகள்சோ பானம்என்றே சுருதிசொல் லியவாற் றாலே தொழும் தெய்வம் எல்லாம் ஒன்றே" - ஆசையெனும் 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/81&oldid=892371" இலிருந்து மீள்விக்கப்பட்டது