பக்கம்:தாயுமானவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் & A í யாதின்பாலும் பிறியாமல் தண்ணருளே கோயில்ஆன பெரிய பரம்பதி” - ஆகாரபுவனம் - 19 'அண்டர் அண்டம் யாவும்நீ கொண்டுநின்ற கோலமே” - பாடுகின்ற பனுவல் - 4 என்ற அடிகளாரின் திருமொழிகள் உணர்த்துகின்றன. (11) இறைவனது திருவருள்: இறைவனது திருவருளே உயிர்களையும் உலகத்தையும் அவனோடு இயைத்து நிற் பது. அவனது அருள் வெளிக்குள் அகிலாண்ட கோடி எல்லாம் தங்குகின்றன. அவனது அருளினை வெளி' என் றது உருவகம். ஐம்பூதங்களுள் மேலாகிய வான் என்பது வெளி (Space) எனப்படும். அந்த அற்புதப் பெருவெளி நாற்பூதங்களுக்கும், அவற் றாலாய அனைத்துப் பொருள்கட்கும் தங்குதற்கு இடங்கொ டுத்து நிற்கின்றது. ஆகாசம் என்ற வடசொல்லும் இக்கருத் தையே பொருளாகவுடையது. யாவும் தன்னுள் அடங்கும் படி மேற்பட்டு நிற்பது திருவருள் ஆதலால் அது வெளி' எனப்பட்டது. உலகங்களும் புவனங்களும் தத்துவங்கள் என்பதனுள் அடங்கும். தத்துவமெல்லாம் சுத்த மாயையின் விரிவாகிய ஐந்து கலைகளுள் அடங்கும். ஐந்து கலைகளும் சிவனது திருவிருட்சத்தின் வியாபகத்துள் அடங்கும். ஆத லால் திருவருள் எல்லாவற்றையும் அடக்கி நிற்கும் என்பது பெறப்படுகின்றது. 'பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பதுஅருள் தாரகத்தைப் பற்றிஅன்றோ சாற்றாய் பராபரமே (102) ஆராயம் ஆகஅருள் பூரணத்தில் அண்டமுதல் பார்ஆதி வைத்த பதியே பராபரமே (168) என்ற அடிகளின் திருவாக்குகளாலும் இது தெளியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/83&oldid=892373" இலிருந்து மீள்விக்கப்பட்டது