பக்கம்:தாயுமானவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毫 இறைவனின் திருக்குணங்கள் * 65 $ திருவருள் என்பது இறைவனது அறிவாற்றல். ஆதலால் அது சடமாய மாயையின் வேறாய் உள்ளது. எனினும் அதனை உருவகிக்குங்கால் சடப் பொருளுக்குக் கையாளும் மொழிகளை வழங்குவது நுண் மரபாகும். 'வித்துஅன்றி யாதும் விளைவதுஉண்டோ நின்அருளம் சித்துஅன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே (73) என்று அடிகள் அருளுவதால் அருள் 'சித்து' என்பது தெளி வாகின்றது. நிலம்: தத்துவம் எல்லாம் கடந்த முதல்வனைச் சார்ந்து நிற்கும் பேரறிவாளர்க்கு ஆதாரமாய் நிற்பது திருவருள். ஆதலின் அதனை ஒரு நிலமாக உருவகித்துக் காட்டுவார் அடிகள். "சீராரும் தெய்வத் திருவருள்.ஆம் பூமிமுதல் பார்ஆதி ஆண்ட பதியே பராபரமே (1) என்பதில் திருவளாம் பூமி என்ற தொடரில் இந்த உருவகத் தைக் கண்டு மகிழலாம். நிலமாக உருவகித் திருப்பதைச் சிந்திக்கலாம். . நிலையாத தோற்றமுடையது மாயா உலகம். நிலைத்த தோற்றமுடையது அருள் என்னும் மெய்ஞ்ஞான உலகம். இதனை அடைய விழையும் அடிகள், “பொய்க்காட்சி ஆன புவனத்தை விட்டு அருள்.ஆம் மெய்க்காட்சி ஆம்புவனம் மேவுநாள் எந்நாளோ - எந்நாள் - அருளியல்பு - 2 என்று பகர்வார். மழை, கடல், ஆறு: திருவருளைப் பல இடங்களில் மழையாக உருவகித்துக் காட்டுவதைக் கண்டு மகிழலாம். "வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்புஅகலத் தண்அருளால் வந்துபொழி கின்ற மழைகாண்பது எந்நாளே” - மேலது - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/85&oldid=892375" இலிருந்து மீள்விக்கப்பட்டது