பக்கம்:தாய்மை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: I.2 தாய்மை

இருந்தது என்பது தேற்றம். ஆயினும் கவிதையின் காலங் கடந்து வாழும் ஆற்றல் உரைநடைக்கு இல்லை என்ற உண்மை தமிழ் மொழியில் மட்டுமன்றி உலக மொழிகள் அனைத்திலும் உண்மையாகக் க | ன முடிகின்றது. தமிழில் தொல்காப்பியம் உரையைக் குறிக்கின்றமையின் - இலக்கியங் கண்டதற்கிலக்கண்ம் இயம்பும் மரபில்-உரைநடை அக்காலத்தில் வாழ்ந்திருக்க் வேண்டும். அதற்குப் பின்பு கடைச்சங்க காலத்திலேயே பல உரைநடை நூல்கள் தோன்றி இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் வாழவில்லையே! அதே வேளையில் நான்கடி ஐந்தடிப் பாடல்கள் கூடப் பாடினவர் பெயர் அறியாத நிலையிலும் அப்பாவின் சிறப்புத் தொடரால் பெயர்பெறும் வகையில், பாடிய புலவரை வாழ வைத்துத் தானும் வாழும் திறனைக் கவிதையில் காண்கின்றோம். எனவே தாம் வள்ளுவர் குறளுக்குள் கவிதையைக் கர்ட்ட வேண்டியுள்ளது. எனவே கற்றறிந்தார் பெற்ற உண்மை அனுபவத்தை உலகுக்கு உ ண ர்த் தி வாழ்வின் இன்றியமையா நெறியினை விளக்கி மக்கட் சமுதாயத்துக்கு வழிகாட்டிகளாக் அமைவன கவிதைகள் அல்லது பாக்கள் என்பது தேற்றம். அப் பாக்களின் சிறப்பினைப் பலபடப் பாராட்டுவர் அறிஞர். க ம் ப ன் கோதாவரியைக் கண்டவுடன் கவிதையை நினைத்தான். அவன் உள்ளத்தில் கவிதை உருப்பெற்றது. உலகுக்கு அதை வாரி வழங்கினான். , - : *

“ புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து - -

- புலத்திற்றாகி அவியகத் துறைகள் முற்றி ஐந்திணை கெறிய எாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் . . - தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் -

- . - கண்டார் ??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/114&oldid=684502" இலிருந்து மீள்விக்கப்பட்டது