பக்கம்:தாய்மை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 115.

என்று அவன் வாய் பாடிற்று. இதில் கவியின் சிறப்பினையும் கோதாவ்ரியின் நலன்ையும் பிணைத்துச் சிலேட்ை வகையில் அழகாகக் கலியின் தன்மையைக் கம்பன் காட்டி விட்டான். தமிழில் கவிதையைக் காட்ட் இதைவிடச் சிறந்த் விளக்கம் இல்லை என்பதோடு தேவையும் இல்லை என்பது தேற்றம்.

கவிதை என்பது என்ன?

மேலை நாட்டு இலக்கிய ஆய்வாளர்கள் இக்கவிதை, யினைப் பல வகையில் ஆராய்கின்றனர். நான் மேலே, கூறியபடி கவிதையே உரைநடையின் மிக்கு நின்று. காலத்தைவென்று வாழும் எனக் காட்டுகின்றனர். அத்தகைய கவிதையாகிய இலக்கியத்தை அவர்கள் பல. வகையில் உலகுக்கு உணர்த்துகின்றனர். சிறந்த இயற்கைக் கவிஞராகிய வேர்ட்ஸ்வொர்த்’ என்பார் கவிதை, தேக்கிப், உணர்வின் அடிப்படையில்-உள்ள நிறைவுடன் காட்டும் உணர்வே கருவாய் அமைய ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடி வருவதே என்கின்றார். ரஸ்கின் என்பார், உயரிய உணர்வின் அடிப்படையில் உயரிய தன்மையில் உருவாவது கவிதை’ என்பர். லீத் ஹண்ட் என்பவர், உண்மை, அழகு; செறிவு இவை காட்டும் விருப்ப நிலையில் கற்பனையும் உணர்வும் கல க் க, சிறந்த மொழியில் ஒருமையில் பன்மையும் பன்மையில் ஒருமையும் பட்டுக் கலந்து நிற்க. உருவாவது கவிதை’ என்பர்’. இத்தகைய கவிதைகளை வடிக்கும் கவிஞர்கள் ஒழுக்க சீலர்களாய் உயர்ந்த தத்துவ. உணர்வாளராய் இருக்க வேண்டும் என்று கோலரிட்ஜ்”

1. Principles of Literary Criticism - Winchester., 2. Ibid - p. 229.

3. ,, p. 229.

4. . ., p. 230.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/115&oldid=684503" இலிருந்து மீள்விக்கப்பட்டது