பக்கம்:தாய்மை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.114 : தாய்மை

என்ற ஆங்கில அறிஞர் வற்புறுத்துவர். இக்கருத்தினை நாம் மேலே கண்ட கம்பனுடைய பாடனோடு ஒப்பு நோக்கின், உலகக் கவிஞர்தம் ஒருமையுணர்வு நன்கு புலப் படும். கவிதை, கவிஞர் தாம் உளத்தில் .ெ ப ற் ற அனுபவத்தை உலகுக்கு உணர்த்துவதேயாகும். வாழ்வின் திறம் காட்டும் வண்ணக் கோலமே கவிதை’ என்பர் மாத்தியூ ஆர்னால்டு”. என்றும் உள்ள நிலைத்த உண்மை களை இன்பில் இழைத்துத் தம் கருத்துக்குக் கற்பனையைத் துணை கொண்டு சமுதாயப் புதுப்புது உண்மைகளை -உணர்ந்து நலம் பெறப் புனைவது கவிதை’ என்பர் ஜான்சன். இவை போன்றே எண்ணற்ற மேலை நாட்டுப் புலவர்கள் கவிதை பற்றிப் பாநலம்-பற்றிப் பலபடப் பாராட்டிப் பேசியுள்ளார்கள். அ ப் பாக் களு க் கு இன்றியமையாக் கருத்து, கற்பனை, உருவம், உணர்வு ஆகியவை பற்றி எல்லாம் விளக்கிக் காட்டுவர். அவற்றை வி ரி க் கி ன் பெ ருகு ம் என்றஞ்சி, இந்த அளவில் அமைகின்றேன். - -

இந்த நிலையில் கவிதை பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கலிதையும் வாழ்க்கையும் என்ற .துலிலிருந்து சிலவற்றை எடுத்துக்காட்டுவது தவறாகாது

எனக் கருதுகின்றேன்.

வெறும் புறத்தோற்றத்தால் மட்டும் கவிதை அமைந்து விடாது. அவ்வாறு புறத்தோற்றத். தோடு-பட்டாலும் பீதாம்பரத்தாலும் தம்மை அலங்கரித்துக் கொள்வதோடு-நின்றுவிட்ட பிற். காலப் புலவர்தம் பாடல்களும் அவர்தம் வாழ்

4. Hudson - An Introduction to the Study of

Literaturo.

2. Ibid - p. 68.

3. lbid - p. 64,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/116&oldid=684504" இலிருந்து மீள்விக்கப்பட்டது