பக்கம்:தாய்மை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 16 தாங்மை

வெள்ளம் புறப்பட்டு வர, அது வையத்தை வாழ வைக்கும் தெள்ளிய நீரோடையாய்ச் சிறக் கி ன்ற து உலகம் அறிந்துள்ளதே. மற்றோர் அடியவர்-ஆண்டவனைப் பாடியவர்-இதே கரு த் தை உ ள ங் குளிர்ந்த போதெல்லாம் உவந்துவந்து பாடுவான்’ என்று கூறியிருக் கின்ற்ாரே! இவற்றையெல்லாம் ஒத்து நோக்கின், கவிதை நல்ல உள்ளத்தில் தோன்றும் ஒன்று என்பதும், அக்கவிதையை அந்த நல்லவர்கள் தங்கள் உள்ளத்தில் இருந்து உதடு வழியாக உலகுக்கு உதவி, தாம் இன்புறுவது உலகு இன்புறக் காணும் வகையில் பாடுவார்கள் என்பதும், அந்த வெள்ளப் பெருக்கு வையத்தை வாழ வைக்கும் என்பதும் உறுதி!’

கவிதையின் ஆழம் அளப்பரியதாகும். சொல்லும் பொருளும் சேர்ந்தது கவிதை என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டோம். ஆனாலும், அவற்றின் ஆழத்தை அளந்தறிதல் என்பது எளிதன்று. ஒருசிலர் வெறுஞ் சொற்களை வைத்துக் கொண்டு விளையாடலைப் புரிவார்கள். ஒரு சிலர் உயர்த்த கருத்தை வைத்துக் கொண்டு சொல்லத் தெரியாமல் திண்டாடுவார்கள். ஆனால், இரண்டும் ஒருசேரக் கைவரப் பெற்ற புலவர் தம், பாடல்களின் ஆழம் காணுதல் அவ்வளவு: எளிதன்று. இத்தகைய நல்ல கவிஞர்தம் கவிதைகளை உள்ளத்து அமைத்துத்தான் போலும், வள்ளுவர், பயில் தொறும் நூல் நயம் ப்ோலும் என்றும், அறிதொறும் அறியாமை கண்டற்றால் என்றும் பாடிச் சென்றிருக் கிறார். பயில்தொறும் நூல் நயம் காண்பதெவ்வாறு? ஒரு நூலைப் பயிலும் ஒருவன், திரும்பப் திரும்ப அந் நூலைப் பயில்வானாயின், ஒவ்வொரு முறை படிக்குந், தோறும் புத்தம் புதிய கருத்துக்களை அந் நூலின் பாக்கள்

1. பேராசிரியர், அ. மு. ப.-கவிதையும் வாழ்க்கை

யும் பக்கம்-24.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/118&oldid=684506" இலிருந்து மீள்விக்கப்பட்டது