பக்கம்:தாய்மை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை

7


அறிவறிந்த சமய நெறி பற்றி வாழும் மக்கள் கோயிலுக்குச் செல்வது மரபல்லவா! அதை எண்ணிய ஔவையார் அத்தகைய கோயில் வழிபாட்டினும் 'அன்னை' வழிபாடே சிறந்தது எனக் காட்டவே இவ்வாறு கூறியுள்ளார்.

இயற்கையில் இறைவன் நலம் காண வந்த அடியவர் பலரும் அவ்வியற்கையினை 'அன்னை' என்று பாடுவதையும் பாராட்டுவதையும் காண்கிறோம். வையம் செழிக்க வானம் இருண்டு மின்னி இடித்து மழை பெய்யும் சிறப்பினை அம்மையின் அருள் வெள்ளமாகவே காண்கின்ற அடியவர் பலர். அவருள் மணிவாசகர் சிறந்தவர் என்பதை நான் இங்கு எடுத்துக் கூறவும் வேண்டுமோ!

முன்னிக் கடலைச்சுருக்கிஎழுந்துடையான்
என்னத்திகழ்ந்தெம்மையாளுடையான்இட்டிடையின்
மின்னிப் போலிந்தெம் பிராட்டி திருவடி மேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மையாளுடையான்
தன்னிற் பிரிவிலாஎனகோமான் அன்பற்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும்இன்னருளே
என்னப்பொழியாய்மழையேலோரெம்பாவாய்'

என்ற மணிவாசகர் திருவெம்பாவையை அறியாதாரும் உண்டோ ?

இவ்வாறு தாயாக உள்ள தயாபரனை மக்கள் சில வேளைகளில் தந்தையாக வைத்துப்போற்றுவதும் உண்டு. அதனால் மக்கள் தமக்குத் தாய்மையிடத்துள்ள அடங்கா அன்பினைத் தெரிவித்துக் கொள்கின்றனர். கண்ணனையும் இராமனையும் குழந்தையாக்கிக் குலசேகரர் தம் தாயுள்ளத்தைக் காட்டிக்கொண்ட சிறப்பு உலகறிந்த சிறப்பாக வைணவ உலகமறிந்த ஒன்றலல்வா! சிவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/9&oldid=1231139" இலிருந்து மீள்விக்கப்பட்டது