பக்கம்:தாய்லாந்து.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பத்து மூவர் சிலைகளை வரிசையாக வைத்திருப்பார்களே, அந்த மாதிரி!

ஓரிடத்தில் பெரிய புத்தர்சிலை ஒன்று தனியாக இருந்தது. தங்கக் காகித ரேக்குகள் அந்தச் சிலை மீது பளபளத்துக் கொண்டிருந்தன!

“இதெல்லாம் அசல் தங்கமா?“ என்று கேட்டேன்.

“ப்யூர் கோல்ட் ஷீட்! அசல் தங்கத்திலான மெல்லிய காகிதம். விலை பத்து பாட்டிலிருந்து ஐம்பது பாட் வரை. அவரவர்கள் தங்கள் சக்திக்குத் தக்கபடி வாங்கி வந்து ஒட்டிவிட்டுப் போகிறார்கள் என்றார் கய்டு.

‘பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது என்று சொல்வார்கள். இங்கே பூ வைக்கிற இடத்தில் பொன் வைக்கிறார்கள்’ என்று எண்ணிக் கொண்டேன்.

“சரி; இந்தத் தங்கத்தையெல்லாம் என்ன செய்வார்கள்?”

“கோவில் நிர்வாகத்துக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது சிலை மீதுள்ள தங்கத்தைச் சுரண்டியெடுத்து. ஆலயப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றார் கய்டு.

“இங்கேயும் ‘சுரண்டல்’ உண்டா?” என்று வியந்தார் ஸ்ரீவே.

“சுரண்டல் உண்டு. கோயில் தங்கத்தைக் கோயில் அதிகாரிகளே அதிகார பூர்வமாக நாலு பேர் அறியச் சுரண்டி எடுப்பார்கள்“ என்றார் சொம்பட்.

“எங்கள் ஊர் சுரண்டல் வித்தியாசமானது. கண் திருஷ்டிப் பட்டுவிடும் என்பதால் ரகசியமாக யாரும் பார்க்காத நேரத்தில் சுரண்டி எடுத்து விடுவார்கள்!“ என்றேன்.

கோயிலுக்குப் போய் பிராகாரத்தைச் சுற்றி வந்தவுடன், சற்று இளைப்பாறுவதற்காக ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டோம்.

“அதே நாலைந்து புத்த பிட்சுக்கள் வருகிறார்களே, அவர்கள் யாருடனாவது பேசமுடியுமா, கேட்டுப் பாருங்களேன் என்று சொம்பட்டிடம் ஞாபகப்படுத்தியதுதான் தாமதம், அடுத்த நிமிடம் வேகமாகப் போய் புத்த பிட்சு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் அவர்

63
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/61&oldid=1075247" இருந்து மீள்விக்கப்பட்டது