பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 எங்கோ வீசிய நிலாப்பிஞ்சு இங்கே வந்து ஒட்டை முகட்டின் வழியே விழுந்து அழகுணர்ச்சியைத் தூண்டிவிட் டது . அத்தான்!... 5 * வந்தவள் உடை களைய வில்லை; முகம் கழுவ வில்லை அலு வலகத்திலிருந்து கொணர்ந்த தலைவலி இப்போது இரட்டிப் பாக வளர்ந்து விட்டதாகப்பட்டது அவளுக்கு. அத்தானையே இமைக்காமல் பார்த்தது பார்த்தவாறு இருந்தாள் சுந்தரி. - முகத்தில் மண்டியிருந்த ரோமங்களும் உறுப்புக்களை முற்றுகையிட்ட நோயும் விலகி, மாதவனை-தன் அன்புக் குரிய காதலனே மன்மதனாகக் கண்டாள்; அவ்வாறு கற். பனை செய்து கொண்டாள். ஏன், அவனே இந்நோய் வசப் ப்டுமுன்னம், அப்படி இருந்தவன்தானே?... இல்லையென்முல், அவனும் அவளும் மனத்தோடு மனம் கலந்து, ஒரு மனத்தில் மறு மனத்தை அழுத்திப் பதித்து, கருத்துக்களின் சந்திப்பில் கனவுகளைப் பரிவர்த்தனை செய்து, அவர்களிருவரும் தங்களுக்குத் தாங்களே ஆதரிச சித்தாந்த விளக்கம் போல்வும், தங்களது காதல் வெற்றியே நாடு கடந்த-மொழி கடந்த-இனம் கடந்த ஒர் ஒருமைப்பாட்டு உண்மையின் நடப்புப் போலவும் எண்ணி, நடந்து, பின் திருமணம் செய்து கொண்டிருப்பார்களா? அவர்கள் காதலே ஒரு கதை! சென்னை அவர்களை வாழ்த்துவதற்கென்றுதான் தொடக் கத்தில் வரவேற்றிருக்க வேண்டுமோ? தஞ்சாவூரில் அவளுக்கும் திருச்சூரில் அவனுக்கும் சொந் தம், ஒரளவு சொத்து சுகம் எல்லாம் இருந்தும், இருதரப்புப் பெற்ருேர்களும் தங்கள் தங்கள் லட்சியமே முடிவு என்று. சொல்லி, அவ்விருவரையும் கையைக் கழுவி' விட்டாற்