பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? நாகப்பன் முறைப்படி ஒரு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்ட சேதியையும் இவளேதான் சொன்னுள். நாகப்பனப்பற்றிய நினைவு ஊர்ந்த தருணம், அஞ்சலை பின் உள்மனத்தில் கலக்கம் எழுந்தது-வழக்கம்போலவே. "ஐயோ!. .அந்தப் பாவி கடைசியிலே என்ன திமிரோட அப்படிக் கத்தினன்!. அவளால் அந்த அதிர்ச்சியை எப்போதுமே தாங்க முடியாது. வேர்வை கொட்டிற்று. ஆயாவுக்குக் கெடு மாற்றிச் சொல்லி அனுப்பி விட் டாள். வெள்ளாற்றுப் பாலத்தடியில் மருதமுத்துவுக்கு எடுபிடி வேலை. ஒரு பெரிய குத்தகைக்காரரிடம் இவனுக்குச் சஞ்சாயக் கூலி. அன்ருடப் பொழுதை ஒட்டுவதே எத்துணை பெரிய போராட்டமாகப் போய்விடுகிறது!.. போராட்டத்தின் வெற்றி-தோல்வி முத்திரை குத்தும் முழு உரிமையையும் தான் வைத்துக்கொண்டு இப்படி உல கத்தை ஆட்டிப்படைத்து வேடிக்கைகாட்டி வேடிக்கை பார்ப்பது ஆண்டவனுக்கே அழகாகத் தோன்றுகிறது போலும்! - குடிசையின் மேற்புறத் தட்டுப்பலகையில் வைத்திருந்த உண்டியல் கலயத்தை குதிகாலை எம்பி எடுத்தாள் அஞ்சலை, காலைப் பற்றி விளையாடியது குழந்தை, அணைவதற்குள்ளே பரிதிக் கோமானுக்கு ஒரு நப்பாசையா-பொற்கிரணங்களை வாரி வழங்கினன். உண்டியல் கலயத்தை எடுத்துப் பதன. மாக ஏந்தியவள், மகளின் கைகளை மிதித்துவிடாமலிருக்க. ஒரு தப்படி தள்ளிக் காலை வைத்தவள் தடுமாறிவிட்டாள். படக்கென்று கை நழுவிவிட்டது. கலயம், நாணயங்கள் சிந்திச் சிதறலாயின. - அவளுக்கு உயிர் போய்விட்டது. "ஐயையோ!...” உடலின் ரத்த தாளங்கள் கொதித்தன் ன்னக்கு மொதல் மொதலில்ே குடுத்த ஆசை இது!’ 3.