பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாங்குடி காளி கோயில் தேரோட்டத்தில் அஞ்சலையும் மருதமுத்துவும் சந்திக்க, இதுவே அன்பின் சந்திப்பாக உருப் பெற்று, பிறகு அதுவே தாம்பத்யப் பிணைப்பின் முதற்சங்கம மாகவும் உருமாறிய அன்று-அவன் அவளிடம் கை நீட்டிக் கொடுத்த பரிசில் அது. இதுதான் நமக்கு எல்லாம். சேமிக் இற வளமை கைபழகிப் போளுக்க, அப்பாலே நமக்கு ஒரு குறையும் இல்லே!..!” என்று சொல்லிக் கொடுத்தான் அவன். . விழிக்கடையில் வழி மறித்து வழிந்த விழி வெள்ளத்தை அஞ்சலை கட்டுமானம் செய்ய முடியவில்லை. நெஞ்சம் எம்பி எம்பித் தணிந்தது. 'ஆத்தா மூத்தவளே! குதாவிடை ஏதும் செஞ்சுப்புடாதே!...” நின்ற இடத்தில்-நின்ற நிலையில் தெய்வத்தைக் கைதட்டி அழைத்தாள், கைகூப்பி, தன் கோரிக்கையை ஒப்படைத்தாள். அந்தத் தெய்வத்தின் செவிப்புல்ன் பழுதுபட்டு விட்டதோ? சுவரிலே பதிந்திருந்த கண்ணுடியில் தெரிந்த தாலியின் எழிலை ரசித்துக்கொண்டிருந்த அஞ்சலை எப்படிப்பட்ட இடி யைத் தாங்க வேண்டியவளாகிவிட்டாள்... அதோ

ஐயையோ, மச்சானே!...” .

கூவி அழுதாள்; கூக்குரலிட்டுக் கூப்பிட்டாள். அவளது நேசத்தின் மச்சான-நினவின் நிழலை-உயிரின் துடிப்பை பிணமாகக் கிடத்தினர்கள்!-மருதமுத்துவின் உயிர் எங்கே?...

  • சமச்சான்!...”*

காலயில் பயணம் சொல்லிச் செல்கையில், அவன் புறப் பட ஒப்பாதவன்போல புறப்பட்டுச் சென்ருனே, பாவம்: F. -அப்படியெனில், அவன்தான் தெய்வமா?...